Home>>இந்தியா>>வரலாற்றில் மறக்க முடியாத மறைக்க முடியாத நம் தமிழறிஞர்கள்
தாத்தா ரெட்டமலை சீனீவாசன்
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

வரலாற்றில் மறக்க முடியாத மறைக்க முடியாத நம் தமிழறிஞர்கள்

வரலாற்றில் மறக்க முடியாத மறைக்க முடியாத நம் தமிழறிஞர்கள், அவர்களின் தமிழ்தொண்டு பற்றிய பதிவு:

கிந்தி திணிப்பு போராட்டத்தை முதன் முதலில் தொடங்கிய நம் தமிழறிஞர்கள்
மறைமலையடிகள்,
நாவலர் சோமசுந்தர பாரதியார்,
மறைமலையடிகள்,
ஈழத்து சிவானந்த அடிகள்,
கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகிய தமிழறிஞர்களே
முதன்மை போராளிகள்.

கிந்தி எதிர்ப்பின் முதற் தொடக்கம் இவர் நால்வரிடமிருந்தே.

சுயமரியாதை இயக்கத்தை முதன்முதலில் 1925ல் தோற்றுவித்தவர் தமிழ்குடியில் பிறந்த திரு.ராமநாதன் அவர்கள்.

தென்னிந்தியாவில் முதன் முதலில் சாதிஒழிப்பு போராட்டத்தை தொடங்கியவர் ஐயா.அயோத்திதாச பண்டிதர் அவர்கள்.

சமூக சீர்திருத்த போராளி தாழ்த்தப்பட்ட ஆதித்தமிழ்குடிகளுக்காக சட்டசபையில் எந்த வகுப்பும் எந்த சமூகமும் பொதுவெளியில் நடக்கலாம் போன்ற முக்கியமான சட்டங்களை இயற்ற காரமாணவர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள்.

நீதிமன்றத்தில் சாதிகள் அடிப்படையில் இருந்த இருக்கை வேறுபாடுகளை களைந்து எறிந்து அனைத்து சாதியினருக்கும் சம இருக்கை அமைய போராடியவர் மார்சல் நேசமணி.

மார்க்ஸ்,லெனின் பொதுவுடமை கருத்துகளை எவரின் பரிந்துரையுமின்றி இந்தியாவின் தெற்கு மூலையில் ஒரு மீனவக் கிராமத்திலிருந்து தன்தேடுதலின் மூளம் உள்வாங்கியவர் சிங்காரவேலர். வெறும் ஊதிய உயர்வுப் போராட்டங்களையும் உரிமைகளை கேட்டுப் பெறுகின்ற அமைப்பாகவும் மட்டுமே செயல்பட்டு வந்த தொழிற்சங்கத்தை வேறு ஒரு வடிவத்துக்குக் கொண்டு வந்தார் சிங்காரவேலர்.

பிறந்த குலமும், சாதியும் எப்படி உயர்வு தாழ்வை நிர்ணயிக்கும் வாழ்க்கையில் சுயஒழுக்கமும் மனிதனின் செயல்பாடுகளும் தானே அவரவர் உயர்வு தாழ்வை நிர்ணயிக்க வேண்டும் என்று முழக்கமிட்டவர், வரணாசிரமத்தை எதிர்த்து காந்தியிடமிருந்து விடுபட்டார். பொதுவுடமை தத்துவங்களை நிறுவிய கடைசிவரை மண்சுவர் இல்லா வீட்டில் வாழ்ந்து தொழிலாளர்கள் உரிமையை பெற்றுத்தற போராடி மேடையிலேயே உயிர்விட்ட பொதுவுடமை பிதாமகன் சீவானந்தம்.

தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்ட தமிழுக்காக அரும்பணியாற்றிய தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார்.

கிந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கியவர்களில் ஒருவர் முதன்மைப்போராளி, தமிழ்மொழி உயர்விற்காக அரும்பாடுபட்டவர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள்.

பிறமொழிசொற்கள் தமிழ்மொழியில் கலவாமல் சீர்திருத்தபணிகளை செய்த தனித்தமிழ் அறிஞர் மறைமலையடிகள்.

இப்படி நம் மண் சார்ந்த, நம் மூதாதயர்களின் வரலாற்றை, மொழி சார்ந்த இனப்பண்பாட்டை, அடுத்த தலைமுறையினருக்கு நாம் விடாமல் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருப்பது நம் கடமை இல்லையென்றால் நம் தமிழின வரலாற்றின் உண்மையும், அருபெரும் தழிழறிஞர்கள் ஆற்றிய அரும்பணியும் நாளைய தலைமுறைகளுக்கு தெரியாமல் போய்விடும்.


கட்டுரை:
திரு. நா.செல்வமுருகன்,
மேலவாசல், மன்னார்குடி.

Leave a Reply