அரியலூர் நகரத்தில், அறிவிப்புப் பலகை இருந்தும் அதை சிறிதும் பொருட்படுத்தாது குப்பைகளை கொட்டிச் செல்லும் தனியார் கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள்.
இதில் சம்மந்தப்பட்ட தனியார் கடைக்காரர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த நிலைமை மாறாது.
அரியலூர் நகரம் ஏற்கனவே மிக நெருக்கடியாகவும், சுகாதாரமற்றும் இருக்கும் நிலையில், நாளுக்கு நாள் திரும்பிய பக்கமெல்லாம் குப்பைகளை கொட்டிச் செல்லும் பொறுப்பற்ற பொதுமக்களாலும் அவற்றுக்கெதிராக நடவடிக்கையெடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்க்கும் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தாலும் நோய்ப் பரவலுக்கான வாய்ப்பு அதிகளவில் இருப்பதால் நமது அரியலூர் மாவட்ட தலைநகரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
அறிவிப்புப் பலகை வைக்கும் அதே நேரத்தில் ஆங்காங்கே பெரிய கொள்ளளவு கொண்ட குப்பைத் தொட்டிகளையும் வைக்க வேண்டுமாய் மாவட்ட நிர்வாகத்தையும் அரியலூர் நகராட்சியையும் கேட்டுக் கொள்கிறோம். அதேசமயம் பொதுமக்களும் பொறுப்புணர்வோடு நடந்து கொண்டால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாக மாற்றலாம்.
—
செய்தி உதவி:
திரு. அருள் ராஜா,
அரியலூர் சோழதேசம்.