Home>>இந்தியா>>தொற்றை வெகுவாகக் குறைத்து இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழும் தமிழ்நாடு அரசு
இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

தொற்றை வெகுவாகக் குறைத்து இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழும் தமிழ்நாடு அரசு

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் மற்றும் பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திகளை கீழே பகிர்ந்துள்ளோம்.


1. கொரானா பரவலை தடுத்திட சிறப்பாக செயல்பட்டு, தொற்றை வெகுவாகக் குறைத்து இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழும் தமிழ்நாடு அரசுக்கும், சுகாதாரத்துறைக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

2. ஆய்வக நுட்பனர் பயிற்சி (Lab Technician course – DMLT.) என்பது 2 வருட படிப்பு ஆகும். பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பயிலாம்.இப்படிப்புகளை அரசு நிறுவனங்களிலும் மற்றும் தமிழக அரசின் அனுமதி பெற்ற ஆய்வக நுட்பனர் பயிற்சி நிலையங்கள் மூலமாக மட்டுமே பயிலலாம்.

ஆனால் தமிழக அரசின் அனுமதி பெறாமல், தமிழகத்தில் நூற்றுக் கணக்கில் ஆய்வக நுட்பனர் பயிற்சி நிலையங்கள், சட்டத்திற்குப் புறம்பாக நடத்தப் பட்டு வருகின்றன.

இந்நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், கிராமப்புற, ஏழை எளிய குடும்ப மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ஏமாற்றப்படுகிறார்கள். கட்டணக் கொள்ளைக்கும் உள்ளாகி வருகிறார்கள்.

பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களை குறிவைத்து இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் நடத்தப் பட்டு வருகின்றன. இது ஆய்வக பரிசோதனை சேவையின் தரத்தை மிகவும் பாதிக்கிறது. மக்கள் நலனுக்கு எதிராக அமைகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, இது போன்ற சட்டத்துக்கு புறம்பாக நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

3. கொரானா பரிசோதனை மாதிரி (throat / nasal swab ) களை எடுப்பதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து ஆய்வக கூடங்களுக்கும், ஆய்வக நுட்பனர் களுக்கும் தமிழக அரசு மக்கள் நலன் கருதி அனுமதி அளிக்க வேண்டும்.

4. தமிழகத்தில் மருந்தகங்களில் (pharmacy) glucometer மற்றும் அதற்கான stripகளை கொண்டு, ரத்தச் சர்க்கரையின் அளவு, ஹீமோகுளோபின் அளவு மற்றும் கொலஸ்டிரால் ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது சட்டத்திற்கு புறம்பானது. அங்கு தமிழக அரசின் அனுமதி பெறாமல்,பதிவு செய்யப்பபடாமல், இரத்தப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

மருத்துவக் கழிவுகளை அகற்றும் நிறுவனத்திடமிருந்து (Bio Medical Waste) அனுமதி பெறாமலும் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, மருந்தகங்களில் மருத்துவப் பரிசோதனைகளை சட்டத்திற்கு புறம்பாக செய்வதை தடுத்திட வேண்டும்.

5. பரிசோதனைக் கூடங்களில் உபயோகிக்கும் ,உபகரணங்கள் மற்றும் பரிசோதனை வேதிப்பொருட்கள் மற்றும்
திரவகங்களுக்கு (Reagents )முறையான தரக்கட்டுப்பாடு (Quality Standardisation) பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தரக் கட்டுப்பாடு செய்யப்படும்போது மட்டுமே மருத்துவ பரிசோதனை முடிவுகள் சரியாக இருக்கும்.

6. மருத்துவக் கழிவுகளை (Bio medical waste) அகற்ற, தமிழகத்தில் சில நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. சில மாவட்டங்களில் அந்நிறுவனங்கள், மருத்துவ கழிவுகளை பரிசோதனை நிலையங்களில் இருந்து எடுத்துச் செல்வதேயில்லை. ஆனால், அதற்குரிய கட்டணத்தை மட்டும் உயர்த்தி வசூலித்து வருகின்றன. எனவே, தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு முறைப்படுத்த வேண்டும். அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

7. அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகள், மருத்து ஆய்வகத்திலிருந்து மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணிகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். தனியாரை அனுமதிக்கக் கூடாது.

8. அரசு மருத்துவ துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஆய்வக நுட்பனர்கள் அனைவருக்கும் பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்.

9. கடந்த ஆட்சியில் கொரோன காலத்தில் ஆய்வக நுட்பனர்களை, வெவ்வேறு மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்து பணி செய்ய வைத்தனர். அவர்கள் அனைவரையும் மீண்டும் அவர்களின் முந்தைய பணியிடங்களிலேயே பணியமர்த்த நடவடிக்கை எடுத்திட வேண்டும். அவர்களது அடிப்படை ஊதியத்தை உயர்த்திட வேண்டும்.

10. ஆய்வக நுட்பனர்களின், நீண்ட நாள் கோரிக்கையான “ஆய்வக நுட்பனர்கள் நலவாரியம்” அமைக்க உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

11. கொரோனா காலத்தில் தற்காலிகமாக பணிபுரிந்து, பணி நீக்கம் செய்யப்பட்ட ஆய்வக நுட்பநர்களுக்கு, பணி நியமனங்களின் போது முன்னுரிமை வழங்கிட வேண்டும்.

இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில், சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர். சாந்தி மற்றும் பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் மாநில துணைத் தலைவர் திரு.S. தனவந்தன், மாநில துணைச் செயலாளர் திரு.S.ஆறுமுகம், N.சரவணன் மற்றும் அனைத்து சென்னை மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மருத்துவர். ஜி.ஆர்.இரவீந்திரநாத்,
தொடர்பு இலக்கங்கள்: 9940664343 / 9444181955
பொதுச் செயலாளர்,
சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்.

ப.காளிதாசன்,
அகில இந்தியத் தலைவர்,
பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச் சங்கம்.
தொடர்பு இலக்கம்: 9003913955

Leave a Reply