Home>>அரசியல்>>தொடக்க காலத்தில் பெயர் வைத்த சூலை 18 தான் என்று குழப்பத்தை உருவாக்கியவர் கி. வீரமணி
அரசியல்செய்திகள்தமிழ்நாடுவரலாறு

தொடக்க காலத்தில் பெயர் வைத்த சூலை 18 தான் என்று குழப்பத்தை உருவாக்கியவர் கி. வீரமணி

நாற்காலி விசுவாசிகளே வணக்கம்…

நீங்கள் இருக்கும் இடம் தமிழ்நாடு என்பதை உங்களால் இருந்து கொண்டே இல்லை என்று சொல்ல முடியுமா?

இந்தியாவில் நவம்பர் 1 தனி மாநிலமாக பிரிந்த அனைத்து மாநிலங்களுக்கும் இந்திய ஒன்றிய குடியரசு தலைவர் வாழ்த்துக்கள் கூறினார். தமிழ்நாட்டை தவிர அது ஏன்? ஒருவேளை அனைத்தும் மாநிலமாக தமிழ்நாடு மட்டும் நாடாகப் பிரிந்தது என்ற வயித்தெரிச்சலா என்று தெரியவில்லை.

சென்ற ஆண்டு தமிழக அரசு நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாட்டு நாள் என அறிவித்த போது இங்கு அனைவரும் பல்வேறு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்கள் ஆனால் இன்று ஆட்சி மாறியவுடன் தேதியும் மாறுகிறது அவர்கள் அனைவரும் அமைதியாகி விட்டார்கள்.

இது எந்த மாதிரியான சமூகம், அரச விசுவாசி சமூகமா இல்லை அடிமை சமூகமா? ஆறு வயது பிள்ளையை கேட்டால்கூட எது சரியான நாள் என்று தீர்க்க சொல்லும். ஏன் இவர்கள் வாழ்த்து கூற கூட மௌனிக்கிறார்கள்.

தமிழன் தனக்கான அடையாளத்தை பெற்று விடக்கூடாது என்று தொடர்ச்சியாக அவனுக்கு 2 விடயங்களாக குழப்பி குழப்பி வைத்திருப்பது தமிழா திராவிடமா, சைவம் மதமா உணவா, வருடப்பிறப்பு தையா சித்திரையா?

அந்த வரிசையில் இப்போது தமிழ்நாட்டு நாள் நவம்பர் 1னா சூலை 18டா கிட்டத்தட்ட அனைவரும் நவம்பர் 1 என்று கூறிய தொடக்க காலத்தில் பெயர் வைத்த சூலை 18 தான் என்று குழப்பத்தை உருவாக்கியவர் கி. வீரமணி. ஏன் கருஞ்சட்டைகளுக்கு தமிழ் இனத்தின் மீது இத்தனை வன்மம் என்று தெரியவில்லை.

தமிழ்நாட்டுக்கு என்ற தனியான கொடி என்று ஒரு கட்டத்தில் இந்தியக் கொடியையும் மற்றொரு மூலையில் தமிழ்நாட்டு முத்திரையும் கொத்தி குத்தி அதனை தமிழ்நாட்டு கொடி என்று பெயரிட்டு எங்குமே பயன்படுத்தாமல் முடக்கி வைத்திருக்கிறது இந்த இன வெறுப்பு ஆட்சி.

எல்லா மாநிலமும் தனக்கான கொடி வைத்திருக்கும்போது அது பிரிவினைவாதம் கீழ் வருவதில்லை.
மா பொ சி உருவாக்கிய கொடியை காலத்தின் தேவை கருதி மீண்டும் உருவாக்கி அதனை பொது சொத்தாக அறிவித்து. பெரும்பாலானோர் ஏற்று. உலககெங்கும் ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் எந்திய மூவேந்தர் சின்னம் பதித்த நீல வண்ண கொடியை ஏற்றியவர்களை தமிழ்நாட்டு அரசு சிறைப்படுத்தி வழக்கு போட்டுள்ளது. இதற்குப் பெயர்தான் பாசிசம்.

பாசிசம் மீண்டும் முறையிட தொடங்கியிருக்கிறது.

கள்ள மௌனம் காக்கும் ஆன்றோர் சான்றோர்களே உங்களை இந்த தமிழ்நாட்டு மண் சுமப்பதில் வெட்கப்படுகிறது.


திரு. இங்கர்சால்,
வள்ளுவர் வள்ளலார் வட்டம்,
நார்வே

Leave a Reply