இன்று (18/11/2021) திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்கள் திடீரென திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வினை மேற்கொண்டார்.
மேலும் பணியில் இருந்த மருத்துவர்கள் திரு Dr.சுகைல் M.D, திரு Dr.சதாம் M.S Ortho, மற்றும் மருந்தாளுனர் திரு.சதாசிவம் உள்ளிட்டோரிடம் பல்வேறு விபரங்களை கேட்டதோடு மழைகாலம் என்பதால் கூடுதலாக கவனமுடன் செயல்படவும் கேட்டு கொண்டார். விரைவில் புதிய கட்டிடங்கள் பணி தொடங்கபடும் என் கூறினார்.
சட்டப்பேரவை உறுப்பினர் திடீரென ஆய்வு மேற்கொண்டதால் அப்பகுதி சற்று பரபரப்பானது. புறநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்களின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டினர்.
இந்த நிகழ்வின்போது சட்டப்பேரவை உறுப்பினருடன் சிபிஐ நகர செயலாளர் முருகேசன், துணைச்செயலாளர் டிபி.சுந்தர் உள்ளினடோர் உடனிருந்தனர்.
—
செய்தி உதவி:
தோழர். கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.