ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் இவ்வளவு அதிகமான கட்டணம் வசூலிக்கலாமா? இது என்ன நியாயம்? ஏழை எளிய மாணவர்கள் இந்த அரசு மருத்துவக் கல்லூரியில் எவ்வாறு படிக்க இயலும்? இது சமூக நீதிக்கு எதிரானதல்லவா?
தேர்தலுக்கு முன்பு தி.மு.க அளித்த வாக்குறுதிகளுக்கு எதிரானதல்லவா?
தொடர் போராட்டங்களின் காரணமாக, கடந்த அ.இ.அ.தி.மு ஆட்சிக் காலத்தில், இதர தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியிடப்பட்ட அரசாணை என்னவானது?
தயவு செய்து தமிழ்நாடு அரசு இந்தக் கட்டண நிர்ணயிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசின் இதர மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகராக மட்டுமே கட்டணம் வசூல் செய்ய வேண்டும். சமூக நீதியையும், ஏழை எளிய மாணாக்கர்கள் நலன்களையும் காத்திட வேண்டும்.
—
செய்தி உதவி:
சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்.
தொடர்பு இலக்கம்: 9940664343