முத்துப்பேட்டை அருகே ஆரியலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்கள் இன்று (24/11/2021) முத்துப்பேட்டை ஒன்றியம் ஆரியலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார், சுமார் 72 மாணவ மாணவியர்கள் படிக்கும் இப்பள்ளியின் கட்டிடங்கள், வகுப்பறைகள், சத்துணவு கூடங்களை பார்வையிட்டு கட்டிடங்கள் மிகவும் பலவீனமாக உள்ளதை அறிந்தார். மேலும் புதிய கட்டிங்கள் பெற்றுதர உறுதி அளித்தார். மேலும் பணியில் இருந்த பள்ளியின் தலைமையாசிரியர் (பொறுப்பு) மு.கலைவாணி அவர்களிடம் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுவினை கேட்டு பெற்றார்.
—
செய்தி உதவி:
தோழர் கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.