Home>>ஆன்மீகம்>>சிதம்பரத்தில் சிறப்பாக நடைப்பெற்ற திருவருட்பா முற்றோதல்!
ஆன்மீகம்செய்திகள்தமிழ்நாடுவரலாறு

சிதம்பரத்தில் சிறப்பாக நடைப்பெற்ற திருவருட்பா முற்றோதல்!

கார்த்திகை மாத பூசம் நாளை முன்னிட்டு சத்திய பேரொளி தவச்சாலை மற்றும் வள்ளலார் பணியகம் இணைந்து நடத்திய திருவருட்பா முற்றோதல் மற்றும் சிறப்புக் கலந்துரையாடல்.

இன்று 24-11-2021 புதன் கிழமை காலை 9 மணிக்கு சிதம்பரம் வட்டம் சி.மானம்பாடி வள்ளலார் சபையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சத்திய பேரொளி தவச்சாலை நிறுவனர் தயவுத்திரு பரசுபானந்த செல்லையா அவர்கள் தலைமை தாங்கினார். தவச்சாலை செயலாளர் திரு பாலாஜி முன்னிலை வகித்தார்.

வள்ளலார் பணியகத்தின் முன்னனி செயற்பாட்டாளர் அருட்பா சிவ.நாகராஜன் தலைமையில் வல்லம்படுகை வைத்தியநாதன், திரு. பாலசுப்பிரமணியன் திரு.பழனிவேல் (நந்தனார் மடம்), பூங்குடி சந்திரசேகர், கோதண்டபாணி, முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் இசைக்கருவிகளோடு வள்ளற் பெருமானார் அருளிய திருவருட்பா பாக்களை பாடி, முற்றோதலை சிறப்பாக நடத்தினர்.

முன்னதாக சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. முற்றோதல் முடிந்தவுடன் சிறப்புக் கலந்துரையாடல் நடைப்பெற்றது. இதில் பலர் பங்கேற்று வள்ளலாரின் கருத்துக்களை பேசினர்.

இந்நிகழ்வை வள்ளலார் பணியகத்தின் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு வே.சுப்ரமணியசிவா ஒருங்கிணைத்தார்.

இதில் வள்ளலார் பணியகத்தின் செயற்பாட்டாளர் மரபு மருத்துவர் இராமதாஸ், வே.சரவணன் மற்றும் சான்றோர்கள், அன்பர்கள் என பலர் பங்கேற்றனர்.

மேலும் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.


செய்தி உதவி:
திரு. சுப்ரமணிய சிவா வேலுசாமி.

Leave a Reply