கோட்டூர் அருகே களப்பால் அரசு மேல்நிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வித்திட்டம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் பங்கேற்றார்.
கொரானா தொற்று பெருங்காலங்களில் கற்றல் இழப்பை சரி செய்து கற்றல் திறனை மேம்படுத்தி இடைநிற்றலை தடுத்திடவும் மத்திய மாநில அரசுகள் மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (30/11/2021) கோட்டூர் ஒன்றியம் களப்பால் அரசு மேல்நிலைப்பள்ளியில் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து, முன்னிலையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
களப்பால் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ப.சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோட்டூர் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி மணிமேகலை முருகேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்எஸ்.ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சுளா இலரா, குறிச்சிமூலை ஊராட்சி மன்ற தலைவர் கே.எம்.அறிவுடைநம்பி, வட்டார ஊராட்சி உறுப்பினர்கள் சாந்திஎம்ஜிபாலு, சாந்தி மகேந்திரன், களப்பால் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதாபாஸ்கர், அக்கரைக்கோட்டகம் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி வேல்முருகன், குலமாணிக்கம் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி குப்புசாமி, பள்ளிக் கல்வித் துறைச் சார்ந்த அதிகாரிகள், வட்டார வள மைய அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று விழாவினை சிறப்பித்தார்கள்.
—
செய்தி உதவி:
தோழர் கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.