தமிழகத்தில் உள்ள ஒரு கோடிக்கு மேற்பட்ட விவசாய தொழிலாளர்களை பாதுகாக்க விவசாய தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மாண்புமிகு தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை.
தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோடி விவசாயத் தொழிலாளர்களின் வாழ்நிலை, சமூக, பொருளாதரம் அடிப்படையில் ஆய்வு செய்து அம்மக்களை பாதுகாத்திட உயர் மட்ட ஆய்வுக் குழு அமைக்க வேண்டும். மேலும் விவசாயத் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு விவசாயத் தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும்.
பழுதடைந்த பழைய தொகுப்பு வீடுகளை அகற்றி புதிய வீடுகள் 400 சதுர அடியில் 6 லட்சம் மதிப்பிட்டில் புதிய வீடுகள் கட்டிதர நடவடிக்கை வேண்டும்.
நீர்நிலை புறம்போக்கில் குடியிருப்பவர்கள் இடத்தை ஆய்வு செய்து நீர் நிலைக்கு பாதிப்பு இல்லாத இடங்களை வகை மாற்றம் செய்து குடிமனை பட்டா வழங்கிட வேண்டும்.
நீர் நிலை பாதிப்பான இடத்தில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் தந்து தரமான வீடுகள் வழங்கிட வேண்டும்.
ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வழங்கபடும் 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி தின ஊதியம் ரூ 600 வழங்க உரிய நடவடிக்க மேற்கொள்ள வேண்டும்.
பழங்குடியினர் சிறப்பு உட்கூறுத்திட்டத்தை பயன்படுத்தி “சத்துணவு தொகுப்பு வழங்கும்” திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
மாண்புமிகு முதலமைச்சர் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் திட்டம் மூலம் பழங்குடி பெண்கள் பயன் பெரும் வகையில் மலைப் பகுதி எல்லைக்கு நகர பேருந்து இயக்கிட வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தலைமைச் செயலகத்தில் இன்று (03/12/2021) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் தோழர் இரா.முத்தரசன் தலைமையில் வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் தோழர் வெங்கடாசலம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.பெரியசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் தோழர் பி.எஸ். மாசிலாமணி, விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர்களில் ஒருவரும் திருத்துறைப்பூண்டி ஒன்றிய பெருந்தலைவருமான அ.பாஸ்கர் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினர்.
மனுவை பெற்றுகொண்ட மாண்புமிகு தமிழ முதலமைச்சர் அவர்கள் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அவர்களிடம் உறுதியளித்தார்.
—
செய்தி உதவி:
தோழர் கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.