Home>>அரசியல்>>நம்முடைய வரிப்பணத்தில் வழங்கப்படும் ஆயுதங்களை கொண்டே நம் மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கை பற்றி ஏதாவது பேசுகிறார்களா?
அரசியல்இந்தியாஉலகம்சிறிலங்காசெய்திகள்தமிழ்நாடுமொழி

நம்முடைய வரிப்பணத்தில் வழங்கப்படும் ஆயுதங்களை கொண்டே நம் மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கை பற்றி ஏதாவது பேசுகிறார்களா?

இன்று மணிப்பூர் நம்மூரில் விவாதப்பொருள் ஆனதில் 0.001% ஈழமும், இன அழிப்பும், இசைப்பிரியாவும் அன்று மணிப்பூரில் விவாதம் ஆகியிருக்குமா என்றால் இருக்காது.

இதேதான் காஷ்மீர், பஞ்சாப், குஜராத், உபி, மபி, காபி கதையெல்லாம். அங்கேயெல்லாம் பிரச்சினைகள் ஏற்படும்போது தமிழ் நாடு கொதித்தெழுகிறது.

ஆனால் நம்முடைய பேரவலங்கள் எவருக்கும் ஒரு சிறு பிரச்சினையாக கூட தெரிவதில்லை. எடுத்துக்காட்டுக்கு, பாகிஸ்தான், சீன எல்லையில் ஊடுருவி பறக்கும் கழுகுகள்
சமபந்தப்பட்ட நாடுகளால் அனுப்பப்பட்ட உளவு பறவைகளா என ஒரு வாரம் பிரைம்டைமில் வைத்து வடக்கத்திய ஊடகங்கள் விவாதம் நடத்துகின்றன.

ஆனால் இந்தியாவின் கஜானாவிற்கு பெரிய அளவில் வரிகட்டும் நம்முடைய வரிப்பணத்தில் வழங்கப்படும் ஆயுதங்களை கொண்டே நம் மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கை பற்றி ஏதாவது பேசுகிறார்களா?

வரலாற்று சிறப்புமிக்க நம்முடைய மொழி, இனம், பண்பாடு பற்றி பேசினாலே… வந்தேறிய ஆரியத்திடம் வீழ்ந்து, படுக்கை விரித்து அடையாளமிழந்த ‘அப்பன் பெயர் தெரியாத’ வடக்கத்திய மாநிலத்தார் தமிழர்களை தீவிரவாதிகளாக பார்க்கிறார்கள்.

அவர்களைப் போல நாமும் ‘வரலாற்று தகப்பன் பெயர்’ தெரியாமல் அடையாளமிழந்து ‘ஆரிய ஜோதியில்’ ஐக்கியமாயிருந்தால் நம்மை ஏற்றுக்கொண்டிருப்பார்கள். சரி, அது வேறு விவாதம். போகட்டும்!

வடக்கத்தியர்களின் போக்கு எவ்வாறு இருக்கிறதென்றால் ஊரில் ஒரு ஜமீன்தார் வீட்டில் சாவு விழுந்தால், அவ்வூரில் இருக்கும் ஏழை குடியானவர்களும், பட்டியல் சமூகங்களும்
அந்த இழவை தன் வீட்டு இழவு போல பாவித்து ஓடியாடி வேலை செய்வார்கள். ஆனால் இவன் வீட்டில் இழவு விழும்போது ஒரு பய வரமாட்டான், இவன் மட்டுமே தனியாளாக பாடை கட்டிக்கொண்டு நிற்பான்.

அப்படித்தான் இருக்கிறது தமிழர் சந்திக்கும் அவலங்களும், வடக்கத்தியார் சந்திக்கும் அவலங்களும். அதற்காக நாம் அங்கேயெல்லாம் அநீதி நிகழும்போது வாய் மூடி மவுனித்து வன்மத்துடன் வேடிக்கை பார்க்க வேண்டுமென்பதில்லை, கூடாது!

நாம் தமிழன் என நம்மை அடையாளப்படுத்தும்போது அது வெறும் தமிழ்மொழி பேசுவது மட்டும்மல்ல. தமிழோடு ஒட்டிவரும் பண்பாட்டை குறிக்கும்.

போரில் வீழ்ந்த எதிரியை கூட எப்படி நடத்த வேண்டும் என்றும் 5000 ஆண்டுகட்கு முன்பு எழுதப்பட்ட மறைகளில் இருக்கிறது. வாடிய பயிருக்காக வாடுபவன் தமிழன். இப்படி எண்ணற்ற சாத்திரங்கள்.
‘அறம்’ நம் அடையாளத்தோடு ஒன்றியது. அறமின்றி தமிழர் அடையாளமில்லை.

அதனால்தான் வெகு இயல்பாக நம்மை அறியாமலே எங்காவது அநீதி என்றால் குமுறுகிறோம்.
ஆனால் ஒரு கும்பல் அதை நம் பலவீனமாக்கி, நம்மை அதன் சுயலாபங்களுக்கு எழுபது ஆண்டுகளாக பயன்படுத்திக் கொள்கிறது, நம்மை விற்கிறது. காங்கிரசோடு சேர்ந்து கொண்டு பாஜக பூச்சாண்டிகாட்டி ஒரு அறுவடையும், பாஜகவோடு சேர்ந்து காங்கிரஸ் பூச்சாண்டி காட்டி மற்றும் ஒரு அறுவடையும் செய்து கொள்கிறது.

தமிழர் இனமும், அடையாளமும்… அந்த கும்பலின் விளைபொருள்/விலைபொருள் அல்ல.
இப்படியான அநீதிகளை இந்திய ஒன்றியத்தின், அதன் ஆட்சியாளர்களின், அதன் அரசியலின் தீராத, தீர்க்கமுடியாத ‘நாள்ப்பட்ட பிணி’ என்பதை உலகுக்கு விளக்க வேண்டும்.

அதை நிரந்தரமாக களைய, எளியோரை வலியோர் ஒடுக்குவதை ஒன்றியத்தின் பண்பாடாகமல் தடுக்க, ஒவ்வொரு அநீதியின்போதும் அதனோடு தொடர்புபட்ட மற்ற அநீதிகளையும் விளக்கி அதை விவாதம் ஆக்க வேண்டும்.

தண்டிக்கப்படாமல் தப்பி வேறொரு உருவில் மாறுவேடமிட்டு அதையே திருப்பி செய்ய வரும் குற்றவாளிகளை அம்பலப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் அமைதிப்படையின்
அட்டூழியங்களையும், குஜராத் படுகொலைகளையும், முள்ளிவாய்க்காளையும், இசைப்பிரியாவையும் பேசாமல் மணிப்பூரை பேசமுடியாது.

பேசினால் அதற்கு பயனும் இருக்காது. தமிழர் அடையாளமும், தமிழர் அறமும் வெறும் தேர்தல் ‘சந்தைப்பண்டம்’ ஆகாது, ஆக விடக்கூடாது!!!


எழுத்து:
திரு. கிருஷ்ணா.

Leave a Reply