Home>>அரசியல்>>அணை பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியிருப்பது கண்டனத்திற்குரியது.
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

அணை பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியிருப்பது கண்டனத்திற்குரியது.

பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி அணை பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியிருப்பது கண்டனத்திற்குரியது.

கடந்த 50 ஆண்டுகளில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் நதிநீர் உரிமைகள் பறிபோகும் வகையில் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டு வரும் நிலையில், இந்த மசோதா மாநிலங்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மத்திய ஆட்சியாளர்கள் நடுநிலையோடு செயல்படாதபோது, தற்போது மாநிலங்களிடம் இருக்கும் அணைகளின் கட்டுப்பாடும் அவர்களின் கைகளில் சென்றுவிட்டால் நிலைமை என்ன ஆகும்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
நாட்டின் கூட்டாட்சி முறைக்கு எதிராக எல்லா அதிகாரங்களையும் மத்திய அரசிடமே குவிக்கும் இத்தகைய செயல்பாடுகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


திரு. TTV. தினகரன்,
தலைவர்,
அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம்.

Leave a Reply