Home>>அரசியல்>>தமிழ்நாட்டில் இந்தியை எப்படி கூடுதல் மொழியாக கொண்டு வரலாம்?
தமிழ்நாடு சட்டமன்றம்
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இந்தியை எப்படி கூடுதல் மொழியாக கொண்டு வரலாம்?

ஒரு தேநீர் கடைக்கு சென்றிருந்தேன். கடையின் உரிமையாளர் ஒரு தமிழ்நாட்டவர். தேநீர் போட்டு கொண்டிருந்தார். வேலைக்கு ஒரு வட இந்தியர் அவருக்கு உதவியாய் இருந்தார்.

அப்போது மூன்று வட இந்தியர் வந்தனர். தேநீர் போட்டுக் கொண்டிருந்தவரிடம் இந்தியில் 4 தேநீர் parcel என்றனர். அவருக்கு புரியவில்லை. அருகில் இருந்தவரிடம் உடனே என்ன சொல்லுறாங்க என்று கேட்டார். அவரும் 4 டீ parcel என்றார்.

தொடர்ந்து அவர்கள் வேறு தின்பண்டங்களையும் தன் சக இந்தி இனத்தவரிடம் அவரின் இந்தி மொழியிலேயே பேசி வாங்கி சென்றனர்.

இப்போ கொஞ்சம் கொஞ்சமாய் என்ன நடக்கும்? முன்பெல்லாம் இந்தி கத்துகோங்க கத்துகோங்க னு இந்திய அரசு கூவிய போதெல்லாம் கற்காத நாம், இங்கு பெருகும் “இந்தி”யரின் பரவலான பரவலால் இந்தி கற்க ஆரம்பிப்போம்.
பள்ளிக்கோ ஏதேனும் மையத்திற்கோ கூட செல்ல தேவையில்லை. நம்முடன் வேலை செய்யும் நபரில் இருந்து, சாலையில் துப்புரவு பணி செய்யும் நபர்கள், ஆட்டோ ஒட்டுவோர், பெட்டி கடை முதல் Super Market வரை பரவலாய் இருக்கும் “இந்தி”யரின் தாக்கத்தால் ஏக், தோ, தீன் முதல், பாய் குரோம்பேட் கோ டிக்கட் தோ என்று கேட்கும் நிலை வரை செல்லும்.

நீலகிரி மாவட்டத்தில் எப்படி படுக மக்களின் குடியிருப்பின் காரணமாய் பரவலாக படுக மொழி அனைவரும் அறிந்து வைத்துள்ளனரோ, எப்படி பெங்களூரு என்று பல் மொழி புழங்கும் இடமாய் உள்ளதோ, அப்படி கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாரும் சிறிய அளவிலான இந்தி அறிவாவது பெற நேர்வோம்.

சமீபத்தில் கூட சிறுபான்மை மொழிகளில் தேர்வு எழுதலாம் என்று மாநில அரசு சொன்னதோ, அப்படி நாளை இந்தியும் சிறுபான்மை மொழியாகும். இது தொடர்ந்தால், இந்திய அரசின் அனைத்து விதமான தமிழ்நாட்டின் மீதான அடக்குமுறைகளையும் சிதைவுகளையும் செய்ய அவர்களுக்கு கைகொடுக்கும்!!!


அறிக! விழிக!
திரு. வேல்கடம்பன்,
தமிழ் வரலாற்று ஆய்வாளர்.

Leave a Reply