கடன் தொல்லைக்கு ஆளாகி நிலைமையை சமாளிக்க முடியாமல் குடும்பமாக தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் கவலையளிக்கின்றன. இன்று மட்டும் அதுபோல இரண்டு செய்திகள் வந்துள்ளன.
தஞ்சாவூரில், கடன் பிரச்னை காரணமாக மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்று பெற்றோர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.
ராணிப்பேட்டையில் கடன் தொல்லை தாங்காமல் கல்லூரி பேராசிரியர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்துகொண்டார்கள்.
பொருளாதார மந்த நிலை நிலவும் சூழ்நிலையின் உடன் விளைவாகவே தனிப்பட்ட வாழ்க்கையில் நெருக்கடிகள் ஏற்படுகின்றன. எனவே, தமிழ்நாடு அரசு இதில் தலையிட வேண்டும். கந்துவட்டி கொடுமைகள் மீது உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தனியாரிடம் பெற்றுள்ள கடன் பிரச்சனைகளை தீர்க்க ‘தனியார் கடன் நிவாரண சட்டம்’ கொண்டுவருவதுடன், கடன் கொடுத்தவர்கள் மற்றும் கடனாளர்களுடன் பேசி சுமூக தீர்வு ஏற்படுத்த உரிய அமைப்பை ஏற்படுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
—
திரு. கே.பாலகிருஷ்ணன்,
மாநில செயலாளர்,
சிபிஐ(எம்),
தமிழ்நாடு.