Home>>கல்வி>>நாட்டு நலப்பணித் திட்டத்தில் சிறப்பாக செயலாற்றிய மாணவியர் தலைவிகளுக்கு புதுமையான முறையில் கீரிடம்
கல்விசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடி

நாட்டு நலப்பணித் திட்டத்தில் சிறப்பாக செயலாற்றிய மாணவியர் தலைவிகளுக்கு புதுமையான முறையில் கீரிடம்

மன்னார்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தில் சிறப்பாக செயலாற்றிய மாணவியர் தலைவிகளுக்கு புதுமையான முறையில் கீரிடம் மற்றும் தலைவி என்பதற்கான அணியரைப்பட்டிகையையும் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் என். இராஜப்பா அணிவித்து பாராட்டுதல்கள் தெரிவித்தார்.

மன்னார்குடி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்டம் சார்பில் சர்வதேச தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டும் பள்ளி மாணவிகளுக்கு கொரொனா தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பள்ளி வளாக செயல்பாடுகளில் பணியாற்றிய மாணவி தலைவிகளை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது
பள்ளியின் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் தீபா வரவேற்றுப் பேசினார் தலைமை ஆசிரியர் கனராஜ சண்முகராமன் தலைமை வகித்தார்.

உதவி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய தாஸ் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருவாரூர் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் என். இராஜப்பா கலந்து கொண்டு மாணவிகள் ஆற்றிய பணிகளை பாராட்டி பேசினார். சமூக சேவை மூலம் தலைமை பண்புகளை வளர்க்கும் பாசறை தான் என் எஸ் எஸ் அமைப்பு. தன்னார்வத்துடன் பிறருக்காக பணியாற்றி அதில் தலைவராக சிறப்பாக செயலாற்றிய மாணவிகளுக்கு கீரிடம் அணிவித்து பெருமை படுத்தும் போது இங்குள்ள ஒவ்வொரு மாணவியும் நாமும் அந்த உயர்வை எட்ட வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தவே இந்த நிகழ்ச்சி புதுமையாக இந்த அரசு பள்ளியில் நடத்தப்படுகிறது.

மாணவியர் முக கவசம் அணிந்திருப்பது மற்றும் மிதிவண்டி ஒழுங்கு படுத்துவது பணியில் சிறப்பாக செயல்பட்ட குழு தலைவி எம். கனிமொழி பெற்றோர் மற்றும் பொது மக்களை கொரொனா தடுப்பூசி போட விழிப்புணர்வும் பள்ளி வகுப்பறை தூய்மையை கண்காணிப்பு செய்த குழு தலைவி எம். பிரியங்கா சோப்ரர கொரொனா தடுப்பூசி முகாம் தொடர்பான முகாம் செய்திகளை அனைத்து மாணவியருக்கு முன்னதாக அறிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பள்ளி வளாக தூய்மை கண்காணிப்பு செய்த குழு தலைவி எம். நிஷா
குடிநீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட குழு தலைவி எஸ். ஹேமவர்ஷினி ஆகியோர்க்கு சிறந்த தலைவி என்பதற்கான கீரிடத்தினை யும் தலைவி என்பதற்கான அணியரைப்பட்டிகையையும் நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட அலுவலர் ராஜப்பா அணிவித்தார்.

அரசு அறிவித்துள்ள கொரொனா கால வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் பி.எட். பயிற்சி ஆசிரியைகள் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


செய்தி உதவி:
திரு. இராஜப்பா,
ஆசிரியர்,
தேசிய மேல்நிலைப்பள்ளி,
மன்னார்குடி.

Leave a Reply