Home>>கல்வி>>போதைப் பொருள் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் மன்னார்குடியில் நடைப்பெற்றது.
கல்விசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடி

போதைப் பொருள் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் மன்னார்குடியில் நடைப்பெற்றது.

மன்னார்குடி தேசிய மேல் நிலை பள்ளியில் மன்னார்குடி நகர காவல்துறை சார்பாக போதைப் பொருள் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் டி. எல். இராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளியின் கணினி ஆசிரியரும் மாவட்ட தேசிய நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளருமான திரு. என். இராஜப்பா அவர்கள் வரவேற்று பேசினார்.

நகர காவல் துறை ஆய்வாளர் விஸ்வநாதன் போதைப்பொருள் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார் அவர் தம் உரையில் குறிப்பிட்டதாவது தமிழ்நாடு அரசு இளைஞர்களிடையே உள்ள போதைப் பொருள் உட்கொள்வது சிகரெட் பிடிப்பது போன்ற தீய பழக்கவழக்கங்களை முற்றிலுமாக நீக்கிட விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என்பதன் அடிப்படையில் தமிழ்நாடு காவல் துறை இந்த நிகழ்ச்சிகளை மாநிலம் முழுவதும் மேற்கொண்டு வருகிறது அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணாக்கர்களிடையே இந்த கருத்தினை வலியுறுத்தி கூறுவதற்காகவே இது போன்ற கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

மாணாக்கர்கள் இத்தகைய தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருப்பதுடன், தங்கள் பெற்றோர்களுக்கு இது போன்ற பழக்கம் இருந்தால் அவர்களிடையேயும் எடுத்து கூறி நல்வழிப்படுத்த வேண்டும். இன்று பெரும்பாலும் நடைபெறுகின்ற விபத்துகளுக்கு காரணம் போதை பொருள்களை சாப்பிட்டு வாகனம் இயக்குவது தான். எனவே எக்காரணம் கொண்டும் ஒருமுறை தான் ஆசை வார்த்தை கூறி இத்தகைய போதை பழக்கத்தில் விழுந்து விட வேண்டாம்.

நல்ல மாணாக்கர்களாக நல்ல பழக்க வழக்கங்கள் உள்ளோராக நீங்கள் இருக்க வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் காவல் துறை உதவி ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள் சங்கர், வாசுக்குமார், நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் திலகர் நன்றி கூறினார்.


செய்தி உதவி:
திரு. என். இராஜப்பா,
ஆசிரியர்,
தேசிய மேல்நிலைப் பள்ளி,
மன்னார்குடி.

Leave a Reply