மன்னார்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நேசக்கரம் தொண்டு நிறுவனம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் கனராஜ சண்முகராமன் தலைமை வகித்தார். பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தீபா வரவேற்று பேசினார். திருவாரூர் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் என். இராஜப்பா முன்னிலை வகித்தார். கோட்டாட்சியர் அழகர்சாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கபசுர குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசும் போது தான் வணிகவியல் பாடத்தில் இளங்கலை மற்றும் முதுகலை மற்றும் பி.எட். படித்து பின்னர் எனது நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து போட்டித் தேர்வுகளுக்கு கடுமையாக பயிற்சி மேற்கொண்டோம் அவ்வாறு மயிலாடுதுறையில் ஒன்றாக படித்த 13 பேரும் இன்று பல்வேறு துறைகளில் அரசு பணியில் உள்ளோம்.
ஆகவே பொருளாதாரம் ஒரு பொருட்டல்ல முன்னேற வேண்டும் என்கிற முனைப்போடு விடாமுயற்சியுடன் உழைத்தால் நல்ல வேலைக்கு செல்ல முடியும் எனவே மாணவிகள் படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். ஆசிரியர்களுக்கும் ஒரு வேண்டுகோள் இந்த பள்ளியை மாநில அளவில் முன்மாதிரி பள்ளியாக கொண்டு வாருங்கள் நன்கு படிக்க கூடிய மாணவிகளை கண்டறிந்து தனிக் கவனம் செலுத்துங்கள் நாம் பெறும் ஊதியத்திற்கு நிறைவான வகையில் இன்னும் ஒரு படி மேலேயே பணியாற்றி மாணவிகளை உருவாக்க வேண்டுகிறேன் இவ்வாறு கோட்டாட்சியர் பேசினார்.
ஜே.சி. இராஜ மன்னார்குடி தலைவர் சபரிநாதன் வர்த்தக சங்க தலைவர் ஆனந்த் நேசக்கரம் ஒருங்கிணைப்பாளர்கள் உழவன் அருண் கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் வாழத்திப்பேசினர் பள்ளியில் பயிலும் 860 மாணவிகளுக்கு மூன்று தினங்கள் இந்த கபசுரகுடிநீர் வழங்கபட உள்ளது. உதவி தலைமை ஆசிரியர் ஆரோக்யதாஸ் நன்றி கூறினார் ஆசிரிய ஆசிரியைகள் மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
கோட்டாட்சியரின் மனிதநேய செயல்…
முன்னதாக பள்ளி வருகை தரும் போது சாலையில் வரும் போது கீழே விழுந்து காலில் அடிபட்ட மாணவியை கண்டவுடன் உடனே தனது ஜீப்பை தந்து அம் மாணவியை அரசு மருத்துவமனையில் சேர்க்க அனுப்பி வைத்ததுடன் மருத்துவமனைக்கு தகவல் தநது உரிய சிகிச்சை மேற்கொள்ள உதவிய செயல்பாட்டினை அங்கிருந்த அனைத்து மாணவிகளும் ஆசிரியர்களும் பாராட்டினர்.
—
செய்தி உதவி:
திரு. என். இராஜப்பா,
ஆசிரியர்,
தேசிய மேல்நிலைப் பள்ளி,
மன்னார்குடி.