Home>>இந்தியா>>எஸ்.சி/எஸ்.டி. துன்புறுத்தலுக்கு எதிரான தேசிய உதவி மையம் தொடக்கம்.
இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

எஸ்.சி/எஸ்.டி. துன்புறுத்தலுக்கு எதிரான தேசிய உதவி மையம் தொடக்கம்.

பட்டியலின (எஸ்சி) மற்றும் பழங்குடியினா் (எஸ்டி) வகுப்பைச் சோ்ந்தவா்கள் மீதான துன்புறுத்தல்களை தடுக்கும் வகையில், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முறையாக செயல்படுத்துவதை உறுதி செய்யும் நோக்கத்துடன், செவ்வாய்க்கிழமை (டிச. 13) தேசிய உதவி மையம் ஒன்றை மத்திய சமூக நீதி அமைச்சகம் தொடங்கி உள்ளது.

இந்த உதவி மையம் நாடு முழுவதும் 14566 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன் 24 மணி நேரமும் இயங்கும். குரல் அழைப்பு மூலம் இந்த எண்ணை அணுகலாம். கிந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் இந்த சேவை கிடைக்கும். இதன் செயலியும் செயல்படும்.

பாகுபாடு இன்றி அனைவரையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் இது செயல்படுத்தப்படும். ஒவ்வொரு புகாரும் பதிவு செய்யப்பட்டு, தீா்வு காணப்படும். பதிவு செய்யப்பட்ட அனைத்து புகாா்களும் விசாரிக்கப்பட்டு, நீதிமன்றங்களில் வழக்காக பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்தி உதவி:
தோழர் கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.

Leave a Reply