Home>>இந்தியா>>சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்புத் தேர்வு வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் கேள்வி.
இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடு

சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்புத் தேர்வு வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் கேள்வி.

சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்புத் தேர்வு (CBSE Board Exam) ஆங்கில வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையிலான பிற்போக்குத்தனமான கருத்துகளைக் கொண்ட கேள்வி இடம் பெற்றிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

வளர் இளம் பருவத்தில்(Teenage) இருக்கும் மாணவச் செல்வங்களின் மனதில் எதற்காக இத்தகைய சிந்தனைகளை விதைக்க வேண்டும்? பெண் குழந்தைகளை இழிவுப்படுத்தும் கருத்துகள் வினாத்தாளில் இடம்பெற்றதற்காக சி.பி.எஸ்.இ வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

மேலும் சி.பி.எஸ்.இ பாடப்புத்தகங்கள் மற்றும் வினாத்தாள்களில் அடிக்கடி இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெறுவதைத் தடுக்க அதன் நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை பொறுப்போடு செய்திட வேண்டும்.


திரு. TTV. தினகரன்,
தலைவர்,
அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம்.

Leave a Reply