Home>>இந்தியா>>பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும்.
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும்.

வங்கிகள் தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் நடத்த இருக்கும் வேலை நிறுத்த போராட்டம் பொதுமக்களை வெகுவாக பாதிக்கும். உடனடியாக ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் தேவைகளை உணர்ந்து தீர்வு காண வேண்டும் என்று மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

அன்னை இந்திரா காந்தி பாரத பிரதமராக இருந்த காலத்தில் தொலைநோக்கு சிந்தனையுடன் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தனியார் வங்கிகள் அரசுடைமை ஆக்கப்பட்டன.

இப்படி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

ஆனால் தற்போது நடைபெற்று வரும் மக்களாட்சிக்கு எதிரான பாஜக ஆட்சியில் தொடர்ந்து மக்கள் விரோத போக்கும் தொழிலாளர்களின் உரிமையை நசுக்கும் செயலும், சர்வாதிகார மனநிலையும் எதிர்கால இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளன.

குறிப்பாக பாஜக அரசு ஆட்சி செய்த கடந்த ஏழு ஆண்டு காலத்தில் மட்டும் அரசு வங்கிகள் ஈட்டிய மொத்த லாபம் ரூ.11,10,913 கோடியாகும் இதில் வராக்கடன்களுக்காக லாபத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நிதி 12,38,346 கோடி ரூபாய். இந்த 12,38,346 கோடிருபாய் பணம் கார்பரேட் முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன

இத்துடன் 8,10,262 கோடி இந்த ஏழாண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் ’90 சதவிகிதம் அளவிற்கு கார்பரேட் முதலாளிகள் வாங்கிய வாராக்கடன்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு இருக்க வங்கிகள் எவ்வாறு லாபத்தில் செயல்பட முடியும், வாரா கடன்களை பெற கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என வங்கி ஊழியர் சங்கத்தினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகவே பா.ஜ.க அரசு செயல்பட்டு வருவது கடும் கண்டனத்துக்கு உரியது.

இந்த வாராகடன் சுமை காரணமாக கடன் வட்டி அதிகரிப்பு, சேவை வரி அதிகரிப்பு போன்ற அழுத்தம் அனைத்தும் வாடிக்கையாளர்கள் மீதும் திணிக்கப்படுகிறது என்பது வேதனை அளிக்கும் செயல். தற்போது மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் வங்கிகளில் 51% பங்குகள் அரசிடம் உள்ளது. இதனை தற்போது 33 சதவிகிதமாகவோ, 26 சதவிகிதமாகவோ குறைக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பாரத் ஸ்டேட் வங்கி தவிர ஏனைய 11 பொதுத்துறை வங்கிகளையும் எதிர் காலத்தில் அரசு எளிதாக தனியார்மயமாக்க சாதகமான நிலை ஏற்பட்டுவிடும்.

ஒரு வேளை அரசு நினைத்தது போன்று அரசு வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்டால் 34 கோடி ஜன் தன் வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவை மறுக்கப்படும், மக்கள் வங்கிகள் மீதான நம்பக தன்மையை இழக்க நேரிடும், மேலும் விவசாயம், சிறு குறு தொழில் நலிவடைந்து போகும், கல்விக்கடன் பெற முடியாமல் மாணவர்கள் படிப்பை தொடரமுடியாமல் போகும் இந்த சங்கிலி தொடரால் நாட்டில் வேலையின்மை, பசி, பஞ்சம் நுகர்வு திறன் குறைவு போன்ற நிலை ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.


திரு. விஜய் வசந்த்,
மக்களவை உறுப்பினர்,
காங்கிரசு கட்சி.

Leave a Reply