நெல்லை பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்திற்கு பிறகு இப்போது தான் பள்ளி கட்டிடங்கள் குறித்த ஆய்வுகளைத் தொடங்கி உள்ளது அரசு. ஒவ்வொரு மாவட்டத்திலும் நூறில் இருந்து இருநூறு பள்ளிகள் வரை கட்டிடங்கள் இடித்துக் கட்டப்பட வேண்டும். புதிய கட்டிடம் என்று ஒன்றைக் கூட காட்ட முடியாது. பள்ளிக் கூடம் நடத்த முடியாது என்கிற கொள்கை முடிவை நோக்கி மேலும் வேகமாகவே அரசு செல்கிறது. ஒன்றிய அரசு பள்ளிக் கூடம் தருகிறோம் ஆனால் நவோதயா போன்ற பள்ளிகள் தான் தருவோம் என்கிறது. தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்தால் சங்கங்கள் முறையிட்டனர்.
இப்போது படிக்க எங்கே போக வேண்டும். வங்கிகள் தான் சரியான இடம். அவர்கள் வட்டிக்கு பணம் தருவார்கள். நாம் படித்து கடன் கட்ட வேண்டும்.
தமிழக கல்வியமைச்சர் வாத்தியாருக்கு சம்பளம் போடவே பணம் முழுவதையும் செலவழிக்கிறது என்கிறார். இவ்வளவுக்கும் வாத்திமார் திமுகவின் வாக்கு வங்கி. கல்விக்கான செஸ் வரி என்று பெட்ரோல் முதல் தீப்பெட்டி வரை எல்லாப் பொருட்களிலும் வாங்குகிறார்கள். ஆனால் பள்ளிக்கூடம் நடத்துவது அரசின் வேலையல்ல என்று ஒரே பாட்டு.
எஜுக்கேஷனல் செஸ் எங்கே தான் செல்கிறது? படிக்கக் கட்டிடங்கள் வேண்டும். பத்து பள்ளிகளுக்கு ஒரு பொதுவான நூலகமோ, ஆய்வகமோ விளையாட்டு மைதானங்களோ கூட கட்ட முடியாதா?
மக்கள் நலன் விரும்பும் அரசு என்று சொல்ல இங்கே எதையும் செய்வதில்லை. மாரிதாஸ் கைது ஒரு நாள். தமிழ் தாய் வாழ்த்து ஒரு நாள், இப்படி எதையாவது கிளப்பிவிட்டு எதையும் செய்வதில்லை.
ஆமாம் அதென்ன இல்லம் தேடி கல்வி. நாலு பேர் வேனில் நின்றபடி சென்றார்களே. என்னவாயிற்று?
மொத்தத்தில் பிள்ளைகளின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத கல்வி நிலையங்கள் எதிர்காலம் இல்லாத கல்வி.
—
செய்தி உதவி:
திரு. இளங்கோ கல்லானை,
எழுத்தாளர்.
—
செய்தி சேகரிப்பு:
திரு. அருள்பாண்டியன்,
பூவனூர், மன்னார்குடி.