மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு…
மன்னார்குடி 33வது வார்டு மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு தெருவில் சிதிலமடைந்த இரண்டு அங்கன்வாடி கட்டிடங்கள் (புதிய,பழைய சத்துணவு கூடங்கள்) உள்ளது.
புதிய கட்டிடம் தரமற்று கட்டப்பட்டு விரைவில் சிதிலமடைந்த நிலையில், பழைய Asbestos கூறை உள்ள சிதிலமடைந்த நிலையில் உள்ள பழைய கட்டிடத்திலேயே மீண்டும் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
.
இது சிதிலமடைந்ததால் தான் புதிய மையம் கட்டப்பட்டது. போலியோ சொட்டு மருந்தும் இம்மையத்திலேயே போடப்படுகிறது. 50 குழந்தைகளுக்கு மேல் உள்ள சத்துணவு மையம் செயல்பட்டு வருகிறது.
மிகவும் சிதிலமான நிலையில் உள்ள இந்த இரண்டு கட்டிடங்களையும், ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதே பகுதி மக்களின் கோரிக்கை.
சிதிலமடைந்த கட்டிடங்களின் படங்களை கீழே பகிர்ந்துள்ளோம்.
—
திரு. அமிர்தராஜா,
மன்னார்குடி.