Home>>அரசியல்>>சென்னை மாநகரத்தின் பூர்வக்குடி – நில உரிமையை உறுதிசெய்திடு!
தமிழ்நாடு சட்டமன்றம்
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

சென்னை மாநகரத்தின் பூர்வக்குடி – நில உரிமையை உறுதிசெய்திடு!

சென்னை மாநகரத்தின் பூர்வக்குடி – உழைக்கும் மக்களின் குடியிருப்பு – நில உரிமையை உறுதிசெய்திடு!

மனித சங்கிலி, ஜனவரி 8, சனி மாலை 3மணி, ராஜரத்தினம் மைதானம், எழும்பூர், சென்னை

* பெரும்பாக்கம் – செம்மஞ்சேரியில் லட்சக்கணக்கான மக்களை குவிப்பதை நிறுத்திடு! அங்கு வாழ்ந்துவரும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பொறுப்பேற்றிடு! கல்வி, சுகாதாரம், போக்குவரத்து என அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடு!

* தலைமுறை தலைமுறையாக இந்நிலத்தில் வாழ்ந்துவரும் மக்களின் வாழ்விட உரிமையை உறுதிசெய்! அரசாணை (G.O.(MS)No. 267) அடிப்படையில் ‘ஆட்சேபமற்ற’ பொறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிடு! தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தை (TNUDP) அமல்படுத்து!

*சென்னை நகரத்தில் ‘ஆட்சேபனைக்குரிய’ மற்றும் ‘ஆட்சேபமற்ற’ நிலங்களில் பட்டியலை வெளியீடு! ஆட்சேபனைக்குரிய மற்றும் ஆட்சேபமற்ற என்பதின் வரையறையை தெளிவுபடுத்திடு!

* சென்னை நகரத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகள் மற்றும் வழித்தடத்தின் ‘இன்றைய’ நிலை குறித்து அறிக்கை வெளியீடு! நீர்நிலைகளுக்கான சுவடுகளே இல்லாத ‘கொளத்தூர் அவ்வை நகர்’ போன்ற பகுதிகளை ‘நீர்நிலை’ என்று சொல்லி வீடுகளை இடிக்காதே!

* பக்கிங்காம் போன்ற கால்வாயோரம் வசிக்கும் குடிசை வாழ் மக்களை சென்னையை விட்டு விரட்டாதே! மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே!

* மறுகுடியமர்வு செய்தால் 5 கீ.மி சுற்றளவில் மாற்று வீடுகள் கொடுத்திடு! சென்னை நகரத்தில் உள்ள காலி புறம்போக்கு நிலங்கள், அரசு நிலங்கள் மற்றும் குத்தகை நிலங்களை உழைக்கும் மக்களின் குடியிருப்பு தேவைக்கு பயன்படுத்திடு!

* எந்த ஒரு குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளும் இடித்து புதிதாக கட்டப்படும் காலம் வரை முறையான ‘தற்காலிக மாற்று குடியிருப்பு’ வழங்கவேண்டும். அனைத்து பிளாக்குகளையும் ஒரேநேரத்தில் இடிக்காமல் பகுதி பகுதியாக இடித்து கட்டிடு.

* கே.பி பார்க் போன்று பன்னடுக்கு மாடிகளை (10, 12மாடிகள்) கட்டாதே ! மக்கள் தொகை அடர்த்தியை (Population Density) அதிகரிக்காதே! Stilt + 4 தளம் என்பதை அமல்படுத்திடு!

*’நம் குடியிருப்பு, நம் பொறுப்பு’ என்று சொல்லி பராமரிப்புப் பணிகளை மக்கள் மீது திணிக்காமல் குடிசைமாற்று வாரியமே செய்திடு!

* குடிசை மாற்று வாரியத்தில் வாழும் மக்களை ‘பயனாளர்கள்’, ‘தற்காலிக குடியிருப்போர்’ என்ற நிலையை மாற்றி குடியிருப்புமீதும், நிலத்தின்மீதும் உரிய சட்ட அங்கீகாரம் வழங்கிடு!

* கடலோரம் உள்ள நிலங்களை மீனவர்கள் குடியிருப்புகளுக்கு ஒதுக்கிடு! பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் திட்டமிடப்பட்டுள்ள ‘மெரினா தொழில் பூங்கா’ திட்டத்தை கைவிடு!


நகர்ப்புற குடியிருப்பு-நில உரிமை கூட்டமைப்பு
9500056554, 8015472337, 8939136163, 9384448044


செய்தி சேகரிப்பு:
திரு. ஸ்ரீதர்,
திருவாரூர்.

Leave a Reply