Home>>இந்தியா>>இந்தியாவிலேயே அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் சிறைவாசி மாதையன்.
இந்தியாகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

இந்தியாவிலேயே அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் சிறைவாசி மாதையன்.

கடந்த 28.7.1987 அன்று ஈரோடு பங்களாபுதூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு 34 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர் மாதையன்.

மாதையன் 302 r/w 109 and 396 IPC ன் கீழ் ஆயுள் தண்டனை பெற்றவர். 2008ஆம் ஆண்டே 1994 ஆண்டு முன்விடுதலைத் திட்டத்தின் படி முன்விடுதலைக்கு தகுதியானவர்.

அவரின் விடுதலைக்காக கடந்த 2014 ஆண்டு அவரை விடுதலை செய்யக்கோரி நாங்கள் தாக்கல் செய்த வழக்கு H.C.P.No.1737 of 2014 ஐ விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் அவரின் விடுதலையை பரிசீலனை செய்ய உத்தரவிட்டது.

ஆனால் தமிழக அரசு முன்விடுதலை செய்யவில்லை. கடந்த 2018 அரசாணையின் (G.O.No.64) படியும் முன்விடுதலைக்கு தகுதியானவர். அவரை விடுதலை செய்ய W.P.No.5391 of 2021 என்ற வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். இந்த வழக்கு நிலுலையில் உள்ளது.

பலமுறை சென்னை உயர்நீதிமன்றத்தில் அவருக்கு மாதவிடுப்பு எடுத்துக் கொடுத்தோம். வீரப்பனின் அண்ணன் என்பதற்காக மட்டுமே அவர் கைது செய்யப்பட்டார். அதற்காக மட்டுமே அவர் சிறையில் உள்ளார்.

தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மாதையனை விடுதலை செய்ய அரசியல் கட்சிகள் அமைப்புக்கள் குரல் கொடுத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியாவிலேயே அதிக ஆண்டுகள் சிறையில் உள்ள மாதையனை நீண்ட விடுப்பில் சிறையில் இருந்து விடுதலை செய்ய (தோழர் தென்தமிழனை நீண்ட விடுப்பில் விடுதலை செய்ததை போல) தமிழக அரசு முன்வர வேண்டும்.


செய்தி உதவி:
வழக்கறிஞர் பா. புகழேந்தி,
இயக்குநர்,
சிறைக் கைதிகள் உரிமை மையம்.


செய்தி சேகரிப்பு:
திரு. கலைச்செல்வன்,
திருவாரூர்.

Leave a Reply