Home>>உலகம்>>ஈழம்>>இலங்கையின் வீழ்ச்சி என்ற ஆய்வில் “ஈழ இனப்படுகொலைப்போர்” என்ற பகுதியை மூடி மறைத்து எழுதப்படுவதில் ஒரு பெரும் அரசியல் இருக்கிறது.
ஈழம்உலகம்சிறிலங்காசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

இலங்கையின் வீழ்ச்சி என்ற ஆய்வில் “ஈழ இனப்படுகொலைப்போர்” என்ற பகுதியை மூடி மறைத்து எழுதப்படுவதில் ஒரு பெரும் அரசியல் இருக்கிறது.

இலங்கையின் வீழ்ச்சி என்பது கொரோனா அல்லது ஒரு குடும்பத்தின் ஊழல் அரசியல் என்று சுருக்கி கொள்வது போன்ற அபத்தம் வேறில்லை. இந்த வீழ்ச்சி 2007ல் ஈழத்தை மூர்க்கமாக தாக்கத் தொடங்கியதில் ஆரம்பமானது. அதன் தொடர்ச்சியாக 2009ல் ஈழ இனப்படுகொலை நிகழ்த்தி ஈழத்தை மொத்தமாக தீக்கிரையாக்கியதில் பெருமளவு வளர்ச்சி பெற்று விட்டது.

ஈழ இனப்படுகொலைக்கு சர்வதேசம் வழங்கி ஆயுதங்கள் மற்றும் அரசியல் ஒத்துழைப்புக்கு பதிலாக பொருளாதார ஆதாயங்களை பெற்றுக்கொண்டன. சர்வதேச நாடுகளின் பொருளாதார நகர்வுகளை ஏற்றுக்கொண்டு இலங்கையின் உள்நாட்டு வழங்களை தாரை வார்த்தைகள். வியாபார ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ளயும் வேண்டும். இவற்றை இலங்கையால் தவிர்க்கவே முடியாது போனது. இலங்கைக்கும் சர்வதேசத்துக்குமான ஒப்பந்தமே அதுதான்.

ஒவ்வொரு வருடமும் ஐ.நாவில் இலங்கைக்கு வரும் நெருக்கடியில் இருந்து காப்பாற்ற தொடர்ந்து சர்வதேச ஒத்துழைப்பு இலங்கைக்கு வேண்டும். இந்த சர்வதேச வலையில் இலங்கை பலமாகவே சிக்கிக்கொண்டது. ஆனால் இதைப்பற்றி எல்லாம் இலங்கை கவலைப்படவே இல்லை. “ஈழத்தை வீழ்த்தினோம். பௌத்த சிங்களவர் நிலத்தை மீட்டோம்” என்று சொல்லிச்சொல்லி சொந்த மக்களை சுரண்டினார்கள் ராஜபக்ச சகோதரர்கள். வேறு எதையும் மக்களுக்கு காட்டாமல் போர் வெற்றி கோசத்தில் மறைத்தார்கள். கடன்களை அடைக்க மீண்டும் மீண்டும் கடன் என்ற நிலையில் கொரோனாவும் வந்து சேர்ந்தது. சோலி… முடிந்தது. எல்லாவற்றையும் தூக்கி கொரோனாவில் போடுவது போன்ற அபத்தம் ஏதுமில்லை.

இலங்கையின் வீழ்ச்சி என்ற ஆய்வில் “ஈழ இனப்படுகொலைப்போர்” என்ற பகுதியை மூடி மறைத்து எழுதப்படுவதில் ஒரு பெரும் அரசியல் இருக்கிறது. அது உச்சமான போலித்தனம் நிரம்பியது!


எழுதியவர்:
திரு. வாசு முருகவேல்.


சேகரிப்பு உதவி:
திரு. செந்தில்குமார் சுந்தரமூர்த்தி.

Leave a Reply