Home>>அரசியல்>>ஸ்ரீமதியின் பிரச்சனையில் உறுதியோடு நின்று நீதியினை நிலை நாட்ட வேண்டும்.
அரசியல்இந்தியாகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

ஸ்ரீமதியின் பிரச்சனையில் உறுதியோடு நின்று நீதியினை நிலை நாட்ட வேண்டும்.

யார் வன்முறையை கையிலெடுத்தாலும் ஒருபோதும் ஆதரிக்க முடியாது.

எங்கள் வீட்டுப் பிள்ளை கள்ளக்குறிச்சி ஸ்ரீமதியை சிதைத்த கூட்டத்தை உரிய நேரத்தில் கைது பண்ணாமல் விட்டுவிட்டு அதற்காக நீதி கேட்டு போராடிய மாணவர்களையும், இளைஞர்களையும் கொத்துக்கொத்தாக பிடித்து வந்து இலங்கை ராணுவம் தமிழீழ மண்ணில் அடைத்து வைத்திருந்ததைப் போல இப்படி அமர வைத்திருப்பது சரியானது அல்ல.

தமிழ்நாடு அரசும் காவல்துறையும் நினைத்திருந்தால் இப்போராட்டத்திற்கு முன்பே அமைதியை நிலைநாட்டியிருக்க முடியும். அதனை செய்ய தவறியதும் தங்களின் குற்றம்தான் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் ஒப்புக்கொண்டு இதன் பிறகாவது ஸ்ரீமதியின் பிரச்சனையில் உறுதியோடு நின்று நீதியினை நிலை நாட்ட வேண்டும்.

சமீப காலங்களில் ஆவினங்குடி பத்தாம் வகுப்பு சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டது உட்பட எத்தனையோ எங்கள் வீட்டுப்பிள்ளைகள் வன்சிதைவுகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கஞ்சா உள்ளிட்ட விதவிதமான போதை பொருட்கள் தமிழ்நாட்டில் விற்கப்படுவதுதான் என்பதையும் தமிழக அரசு உள்வாங்கி புரிந்து கொண்டு அதனை விற்கும் கூட்டங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இல்லையேல் ஸ்ரீமதியை போன்றும் ஆவினங்குடி சிறுமியை போன்றும் எங்கள் வீட்டுப் பிள்ளைகள் பலியாகிக் கொண்டேயிருப்பதை எவராலும் தடுக்க முடியாது.

ஆகையினால் அரசும் காவல்துறையும் கைது செய்த இளைஞர்கள் மீது தங்களின் கோபத்தை காட்டுவதை தவிர்த்துவிட்டு சட்டத்தையும் அறத்தையும் நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இதனை முறையாக கையாளவில்லையென்றால் தமிழ்நாடு முழுக்க இருக்கின்ற பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்கள் கையிலெடுத்து போராடும் சூழல் உருவாகும் என்பதையும் அனுபவபூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்.


வ. கௌதமன்,
தமிழ் பேரரசு கட்சி நிறுவனர்.

Leave a Reply