Home>>அரசியல்>>முக்தார் அகமதுவின் நேர்காணல்கள் பெரும்பாலும் ஆழமற்றதாகவும், பொருளற்றதாகவும், முட்டாள்தனமானதாகவுமே இருக்கின்றன.
அரசியல்செய்திகள்தமிழ்நாடு

முக்தார் அகமதுவின் நேர்காணல்கள் பெரும்பாலும் ஆழமற்றதாகவும், பொருளற்றதாகவும், முட்டாள்தனமானதாகவுமே இருக்கின்றன.

சத்தியம் தொலைக்காட்சி முக்தார் அகமது அவர்கள் திராவிடர் கழக வழக்கறிஞர் அருள்மொழி, அதிமுக பொன்னையன், திமுக டிகேஎஸ் இளங்கோவன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன், காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி, பழ.கருப்பையா, பேரா சுபவீ, சவுக்கு சங்கர், தமிழ்தேசிய பேரியியக்க தலைவர் பெ.மணியரசன், சமீபத்தில் விசிக தலைவர் திருமா உள்ளிட்டோரிடம் நடத்திய நேர்காணல்களை பார்த்துள்ளேன்.

அந்த வகையில் “முக்தார் அகமதுவின் நேர்காணல்கள் பெரும்பாலும் தடித்தனத்துடன் இருக்கின்றன. பேட்டி கொடுப்பவரிடம் அவர் நடந்துகொள்ளும் அணுகுமுறை மிக மோசமானது. எந்தவித ஊடக அறத்திற்கும் உட்படாமல் தான்தோன்றித்தனமாக ஆதாரமற்ற கேள்விகளை கேட்கின்றார். அப்படி இவர் கேட்கும் ஆதாரம் அற்ற கேள்விகளுக்கு கூட மற்றவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். பெரும்பாலும் அவர் கேட்கும் கேள்விகள் அனைத்தும் ஆழமற்றதாகவும், பொருளற்றதாகவும், முட்டாள்தனமானதாகவுமே இருக்கின்றன. ஒருவரை நேர்காணல் செய்யும் பொழுது அவர் துறை சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்பதற்கு அது சார்ந்த அறிவு கொஞ்சமாவது இருக்க வேண்டும். ஆனால் இவரிடம் அப்படி எந்தவித அறிவும் இருப்பது போன்று தெரியவில்லை. அதனால்தான் சம்பந்தமில்லாத சில்லரை தனமான கேள்விகளைக் கேட்டு பேட்டி கொடுக்க வருபவரின் பொருமையை சோதிக்கின்றார். டிஆர்பி ரேட்டிங்கை ஏற்ற வேண்டும் என்பதை தவிர இவருக்கு வேறு எந்த நோக்கமும் இருப்பது போல தெரியவில்லை. இவரிடம் மாட்டிக் கொண்டு பேட்டி கொடுப்பது என்பது ஒரு பைத்தியக்காரனிடம் மாட்டிக் கொள்வது போன்றது.” என்ற தோழர் செ.கார்கியின் முத்தார் மீதான விமர்சனம் சரியானது என்று கருதுகிறேன்.

ஆனால் இங்க தனக்கு பிடிக்காத தலைவரை கார்னர் செய்யும் போது மகிழ்ச்சியடைவதும், தனக்கு பிடித்த தலைவரை நெருக்குதல் செய்யும் போது வருந்தும் போக்குள்ளதால் இவரை போன்றவருக்கு குளிர் விடுகிறது. ரங்கராஜ் பாண்டேக்களை கண்டு கொண்ட தமிழ்மக்கள் முத்தார்களை கடந்துவிடுகிறார்கள். உதாரணமாக, திராவிட கழக வழக்கறிஞர் அருள்மொழி அவர்களுடனான நேர்காணலில் பெரியார் வளர்ப்பு மகளை திருமணம் செய்தது ஏன் என்கிற ரீதியில் பாண்டே கூட கேட்டதில்லை நேரத்தில் இந்த முக்தார் கேட்கிறார். இது ஒரு உதாரணம் தான், இது போல ஒவ்வொரு ஆளுமையிடமும் பொறுப்பற்றமுறையில் இவரது அணுகுமுறை உள்ளது.

ஜென்ராம் போன்ற ஊடகவியலாளர்கள் நடத்தும் நேர்காணல்களில் ஒரு அறம் இருக்கும். ஆனால் பல ஊடகவியலாளர்களிடம் ஊடக அறம் என்பதே இருப்பதாக தெரியவில்லை. குண்டூசி விற்பவன், புண்ணாக்கு விற்பவனெல்லாம் தொழிலதிபர் என்று சொல்லிக் கொல்வதாக காமெடி நடிகர் கவுண்டமணி சொல்வார் கேமராவும் மைக்கும் பிடித்தவர்கள் எல்லாம் ஊடகவிலாளர்கள் ஆகிவிட்டார்கள். இது மிக பெரிய சாபக்கேடு..
ஊடகங்களுக்கு என ஒரு முதலாளிகள் உள்ளனர், அவர்களின் கீழ் இவரை போன்றவர்கள் வேலை பார்க்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு அஜெண்டா கொடுக்கபடுகிறது என்பது மட்டும் உண்மை.


தோழர். கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.
20/08/2022

Leave a Reply