Home>>அரசியல்>>புதிய விமான நிலையம் வந்தால் போக்குவரத்து நெருக்கடி எப்படி குறையும்??
அரசியல்செய்திகள்தமிழ்நாடுபோக்குவரத்து

புதிய விமான நிலையம் வந்தால் போக்குவரத்து நெருக்கடி எப்படி குறையும்??

சென்னையில் ஒரு நாளைக்கு விமான நிலையம் செல்வபர்கள் எண்ணிக்கை என்பது அங்கே மற்ற விடயங்களுக்காக தொடர்வண்டிகள், பேருந்துகள், அலுவல் நிமித்தம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையை விட மிகக்குறைவு.

உண்மையிலேயே சென்னை மக்களுக்கு அவசியத்தேவைகளாக இருப்பது வேறு. ஒரு நல்ல மழை பெய்தால் போதும். அவர்கள் நிலை என்ன என்பது புரியும். ஒருவேளை மழைக் காலத்தில் மக்கள் அனைவரையும் புதிய விமான நிலையத்தில் தங்க வைப்பார்கள் போல.

புதிதாக விமான நிலையத்தை அமைப்பது என்பது தவறான செயல் அல்ல ஆனால் அதற்கு முன்பே பல அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. வளர்ந்த நாடுகள் எல்லாம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்த பிறகே அடுத்த கட்டத்திற்கு சொல்கிறார்கள்.

சென்னை மக்களுக்கு புதிய விமான நிலையத்தை விடப் பல அவசியத் தேவைகள் உள்ளன.

1. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி நல்ல வடிகால் வசதி ஏற்படுத்தித்தருவது.

2. சென்னை முழுவதும் மாநகர தொடர்வண்டிகளை இணைத்து, மக்களில் பெரும்பாலோனரை ரயிலில் பயணிக்க ஊக்குவிக்க வேண்டும். சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளில் பெரிய மக்கள் தொகையை இப்படித்தான் சமாளிக்கிறார்கள்.

3. கூவம் போன்ற சாக்கடைகளை சுத்தம் செய்து சுகாதாரமான ஒரு நகரமாக மாற்ற வேண்டும் அதற்கான சிறப்பான திடக்கழிவு மேலாண்மை, திரவக் கழிவு மேலாண்மை, குப்பை மேலாண்மை போன்றவற்றை திறம்பட செய்ய வேண்டும்.

4. பள்ளி, கல்லூரிகள் நிறுவனங்கள் போன்றவற்றின் வேலை நேரங்களை ஒவ்வொரு பகுதிகளுக்கு ஏற்றார்போல் மாற்றி அமைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் ஒரே நேரத்தில் அனைவரும் வாகனங்களை பயன்படுத்தும் நிலை குறையும்.

இப்படியாக வாகன நெருக்கடியை குறைக்க பல்வேறு ஆக்கபூர்வமான வழிகள் இருக்க ஏராளமான இயக்கர் விளைநிலங்களை பறிகொடுத்து புதிய விமான நிலையம் அமைக்க வேண்டியதன் அவசியம் தான் என்ன??

காரணம் ஒன்றுதான் அதுல நல்ல மார்ஜின் கிடைக்கும். சாலைகள் பாலங்களை விட மிக அதிகமாக கிடைக்கும். அதனால்தான் அதைப் பிடித்து இவர்கள் தொங்குகிறார்கள். மற்றபடி மக்களின் மீது சிறிதும் அக்கறை இல்லாமல் மக்களை எல்லாம் ஒழித்துக் கட்டுவதுதான் வளர்ச்சி என்ற நினைப்பில் எட்டு வழி சாலை, விமான நிலையம் போன்றவற்றை செய்கிறார்கள்.

முதலில் நாடு என்பது மக்கள் தான்!
மக்கள் தான் நாடு!
மக்களுக்காக தான் நாடு! மக்களின் நல்வாழ்வுக்காகதான் நாடு!!

அப்படிப்பட்ட மக்களின் நன்மைக்காக ஏதாவது செய்யுங்கள். அதுதான் மிக அவசியம்.


மன்னை செந்தில் பக்கிரிசாமி

Leave a Reply