மன்னார்குடி தேசிய மேல் நிலை பள்ளியில் காவல் துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் சங்கர கூடத்தில் நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் டி.எல். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் என். இராஜப்பா வரவேற்றார்.
மன்னார்குடி நகர காவல் துறை ஆய்வாளர் திரு. ராஜேஷ் கண்ணா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் தன் சிறப்புரையில் குறிப்பிட்டதாவது.
போதைப் பொருள் பரவலாக இளைஞர்கள் மத்தியில் அதிகமாகி இருந்ததை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. பள்ளி மாணவர்களாகிய நீங்கள் போதைப் பொருள் உட்கொள்ளக்கூடாது. போதைப்பொருள் யாரும் பயன்படுத்தினாலோ அல்லது எங்காவது விற்பனை ஆகிறது என்று தகவல் கிடைத்தாலோ உடன் ஆசிரியரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் ஆசிரியர்கள் எங்கள் காவல் துறைக்கு தெரிவிப்பார்கள். மாணவர்கள் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
“போதை இல்லாத தமிழகம் உருவாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்” என்று பேசினார். தொடர்ந்து போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை மாணவர்கள் மேற்கொண்டனர். காவல் துறையைச் சேர்ந்த உதயகுமார் மற்றும் மகேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக என்.சி.சி. அலுவலர் திரு. திவாகர் நன்றி கூறினார்.
—
செய்தி உதவி:
திரு. இராஜப்பா,
ஆசிரியர்,
தேசிய மேல்நிலைப்பள்ளி,
மன்னார்குடி.