Home>>அரசியல்>>தமிழகத்தில் வடமாநிலத்தவர் ஆதிக்கம்-ஒரு பார்வை
அரசியல்

தமிழகத்தில் வடமாநிலத்தவர் ஆதிக்கம்-ஒரு பார்வை

தமிழ்நாட்டில் சமீப காலமாக நிறுவனங்கள் மற்றும் கடைகள் வட மாநிலத்தில் உள்ளவர்களை அதிகமாக வேலைக்கு பணியமற்றுகின்றனர் .ஏறக்குறைய 2 கோடி பேர் தமிழ்நாட்டில் அவர்கள் இருப்பதாக தகவல் .இதில் முதலாளிகள் சொல்லும் காரணங்கள் நியாயமாக இருக்கவே செய்கின்றன இருந்தாலும் இதில் கவனிக்கப்பட வேண்டிய பல விடயங்கள் என்ன.

கடை முதலாளிகள் வட மாநிலத்தவரை வேலைக்கு வைப்பதில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அதே நேரத்தில் அதற்காக வேலை வாய்ப்புகளை முழுவதுமாக வட மாநிலத்தோர் கையிலும் ஒப்படைக்க முடியாது. இது எதிர்காலத்தில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும். ஆகவே வர்த்தக சங்கம் கூடி பேசி ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.குறைந்த பட்சம் பாதிக்கு பாதியாவது தமிழர் மற்றும் வட மாநிலத்தவர் என்ற ரீதியில் விதிமுறை வைக்க வேண்டும்

தமிழர்களை விட இன்று வட மாநிலத்தவர் அதிகமாக உழைக்கலாம், குறைந்த சம்பளம் பெறலாம், முதலாளிகளுக்கு அதிக ஒத்துழைப்பும் கொடுக்கலாம், இவை எல்லாம் ஆரம்ப காலகட்டத்தில் மட்டுமே. இப்படியே வட மாநிலத்தவரை தொடர்ந்து வேலைக்கு அமர்த்தி கொண்டு இருந்தால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் அவர்களது ஆதிக்கம் தான் அனைத்து கடைகளிலும்,வர்த்தக நிறுவனங்களிலும் இருக்கும். அந்த நிலை வரும் பொழுது அவர்களுக்கென்று ஒரு அமைப்பு வைத்துக் கொள்வார்கள். பின் அவர்கள் வைத்தது தான் சட்டம். இன்று எந்த காரணங்களுக்காக தமிழர்களை முதலாளிகள் புறக்கணிக்கிறார்களோ, அதே வேலையை பின்னால் வடமாநில தொழிலாளர்களும் செய்வார்கள்.
இதற்கெல்லாம்,
நம் கண் முன்னே இருக்கும் பேருதாரணம் ஜியோ சிம் தான்.
ஆரம்பத்தில் இலவசமாக கொடுத்தார்கள். போதுமான அளவு வாடிக்கையாளர்கள் கிடைத்தவுடன் போகப் போக கொஞ்சம் கொஞ்சமாக விலை ஏற்றினார்கள். இன்று மிக அதிக விலை விற்கிறார்கள். இன்று அவர்கள் வைத்தது தான் விலை என்ற அளவுக்கு கொண்டு போய் விட்டார்கள்.

முழுக்க முழுக்க வட மாநிலத்தவரை வேலைக்கு அமர்த்தாமல் இருப்பதும் இன்றைய சூழலில் மிகக் கடினம் தான் . முதலாளிகளுக்கு ஆதரவாகவும் நாம் பேசியாகவும் வேண்டும்..

அதே நேரத்தில் இந்த வேலை வாய்ப்பு விடயத்தை வர்த்தக சங்கம் பேச்சுவார்த்தை மூலம் சமநிலைப்படுத்த வேண்டும்.
சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் சதவீத அடிப்படையில் மட்டும் தான் வெளிநாட்டவர்க்கு வாய்ப்பு அளிக்கிறார்கள். அதாவது ஒரு வெளிநாட்டவரை ஒரு நிறுவனம் வேலைக்கு எடுத்தால் அந்த நிறுவனத்தில் குறைந்தது ஏழு பேராவது அந்த ஊர் காரர்கள் பணி புரிய வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. அவர்கள் ஊர்க்காரர்கள் நன்றாக வேலை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் இதுதான் விதிமுறை. அப்படி செய்தால் மட்டுமே அந்த நாடு அவர்கள் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும். இல்லையென்றால் முழுக்க முழுக்க வெளிநாட்டவர் ஆதிக்கம் தான் அங்கு காணப்படும். அவர்கள் தான் அங்கு உள்ள அரசியலை நிர்மாணிப்பார்கள். அதுபோல் நடக்காமல் இருக்கத்தான் இப்படி ஒரு விதிமுறையை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள். நாம் அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் இன்றைய சூழலில் குறைந்தது ஒரு நிறுவனத்தில் பாதிக்கு பாதியாவது தமிழர்களும் வட மாநிலத்தவர்களும் இருக்க வேண்டும்.
இதுதான் நம் வருங்கால அரசியலுக்கு மிகவும் நல்லது. இல்லையென்றால் இதன் பின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்..

-மன்னை செந்தில் பக்கிரிசாமி.

Leave a Reply