Home>>மன்னார்குடி>>மன்னையில் தேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்தநாளில் குருதிக்கொடை முகாம்
மன்னார்குடி

மன்னையில் தேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்தநாளில் குருதிக்கொடை முகாம்

மன்னார்குடியில் தேசியத்தலைவர்
மேதகு வே.பிரபாகரன்
பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் குருதிக்கொடை முகாம்களை திருவாரூர் மாவட்ட தமிழர் தேசிய முன்னணி கட்சி சார்பாக நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று அவரது 68 வது பிறந்தநாளை முன்னிட்டு,
மன்னார்குடி
அரசு தலைமை
மருத்துவமனைக்கு
தமிழர் தேசிய முன்னணி
திருவாரூர் மாவட்டம் சார்பில்
மன்னார்குடி வடக்குவீதியிலுள்ள
சாய்கிருஷ்ணா திருமண அரங்கில்
குருதிக்கொடை முகாம் நடைப்பெற்றது.

மருத்துவர்
பாரதி கண்ணம்மா
அவர்களின் குழுவோடு
முகாமை நடத்தி கொடுத்தார்
37 நபர்கள் குருதி கொடுத்தனர்.

பொதுச்செயலாளர்
பாரதிசெல்வன் இலரா
தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர்
ஆரூர் ச. கலைச்செல்வம்
மாவட்ட செயலாளர் ஆ.அரிகரன்
மாவட்ட பொருளாளர் இரா‌.பாரதிதாசன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் ஒவ்வொரு வருடமும் குருதிக்கொடை செய்கிறார்கள். அந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் தமிழ் தேசிய உணர்வையும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பற்றிய விழிப்புணர்வையும் தொடர்ந்து பொதுமக்களுக்கு ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றனர்.

தத்தமது தேசத்துக்கும் இனத்திற்கும் தங்களது பெயர்களினால் பெருமையினைத் தேடித்தந்த உலக சரித்திரத்தின் தலைசிறந்த மனிதர்களின் வரிசையில் பிரபாகரன் அவர்களின் பெயரும் பொறிக்கப்பட்டுவிட்டது.

பிரபாகரன் என்ற பெயர் தமிழீழத்திற்கும், தமிழினத்துக்கும் ஓர் அழியாத புகழ்!என்றும் கிடையாத தலைநிமிர்வு!
அவர் இல்லாத இந்த 13 ஆண்டுகளிலும் அவரது அவரது பெயர் மற்றும் சிந்தனை ஒவ்வொரு தமிழர் குருதியிலும் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை இந்த குருதிக்கொடை முகாம்கள் நிரூபிக்கின்றன!.

வாழ்க பிரபாகரன்!வளர்க தமிழுணர்வு!



Leave a Reply