திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரத்தில் Tufidco கடனுதவியுடன் குளங்கள் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தாமரைகுளம் 2 கோடியே 20 லட்சம், ருக்மணி குளம் 1 கோடியே 24 லட்சம், செங்குளம் 82. 15 லட்சம் அண்ணாமலை நாதர் கோவில்குளம் 75 லட்சம் என திட்ட மதிப்பீடு செய்யபட்டு டெண்டர் விடபட்டு பணிகள் நடைபெறுகின்றன.
ஆரம்பம் முதலே இந்த பணிகள் தரமாக இல்லை. சில குளங்களுக்கு போடப்பட்டுள்ள திட்ட மதிப்பீடு (Estimate) அதிகம்.
அதிகாரிகள் வேலை நடைபெறும் இடங்களில் முறையாக ஆய்வு செய்வதில்லை. இந்த பணியில் அனுபவம் வாய்ந்த ஒப்பந்தகாரர்கள் மேற்கண்ட பணிகளை மேற்கொள்ளவில்லை. ஒப்பந்த விதிகள் மீறபட்டுள்ளன.
பக்கவாட்டில் பதிக்கபடும் கற்கள் தரமாக இல்லை. செங்குளத்தில் சுற்று சுவர் எழுப்பி மூடபட்டது ஏன்? என பல்வேறு குறைபாடுகளை சுட்டி காட்டி நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியதோடு கடந்த Sep-29 ந் தேதி முதல்வர், மாவட்ட ஆட்சியர், நகராட்சி நிர்வாக ஆணையர், மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர், CE (தலைமை பொறியாளர்), RE (மண்டல பொறியாளர்), tufidco அதிகாரிகள், தலைமை செயலாளர் உள்ளிட்ட மேலும் பல அதிகாரிகளுக்கு புகாராக அனுப்பினோம்.
ஆனால் மண்டல பொறியாளர் ஒரு நாள் பெயரளவுக்கு ஆய்வு செய்ததோடு சரி. பிறகு பணியை யாரும் முறையாக ஆய்வு செய்யவில்லை. தரத்தை பற்றி எந்த அதிகாரிகளும் கவலை படவில்லை.
அதன் விளைவு #ருக்குமணிகுளம் கிழக்கு பகுதியில் சுற்று சுவர் கல்பதித்து 4 நாள்களில், ஒருநாள் மழையில் சரிந்து விழுந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்திருந்தால் முழு கரையும் சேதம் அடைந்திருக்கும், இது தான் பணியின் தரம்.
Tufidco கடனை வட்டியும் முதலுமாக நகராட்சி நிர்வாகம் அடைக்க வேண்டும். நகராட்சி நிர்வாகம் மக்களின் வரிபணத்தில் நடைபெறும் பணிகளை முறையாக ஆய்வு செய்யாமல் அலட்சியம் காட்டுவது ஏன்?
மன்னார்குடி மக்களின் ஒவ்வொருவரின் வரி பணமும் இதில் அடங்கியுள்ளது.
முதல்வர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பியும் அவர்களும் இதை கண்டு கொள்ளவில்லை. பல்வேறு ஒப்பந்த பணிகளும் இதே அலட்சியத்துடன் தான் நடைபெறுகிறது. கடைசியாக பலிகடா ஆக போவது கீழ் நிலை ஊழியர்களும் அதிகாரிகளும் தான்.
நகராட்சி நிர்வாகம் பார்வையிடுவதை எல்லாம் ஆய்வு செய்வதாக கருதுகிறது. பார்வை இடுவது வேறு, ஆய்வு செய்வது என்பது வேறு. இனிமேலாவது மன்னார்குடி நகராட்சி நிர்வாகம் விழித்து கொண்டு செயல்பட்டால் நல்லது.
மேலும் தற்போது ஏற்பட்டுள்ள நிகழ்வுக்கு பூசி மொழுகாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
—
திரு. A. ஆனந்தராஜ் Ex. M.C
வழக்குரைஞர்,
மன்னார்குடி.