உலகெங்கிலும் உள்ள தமிழின மக்களால் வணங்கப்படும் கடவுள் முருகன். எத்தனையோ தெய்வங்களை தமிழர்கள் வழிபட்டாலும் தமிழ் இனத்திற்கான கடவுளாக பார்க்கப்படுவது முருகன் தான்.
ஆனால் அப்படிப்பட்ட முருகனைப் பற்றிய வரலாறுகள் அத்தனையும் கற்பனையாக திரிக்கப்பட்டவையாக மட்டுமே உள்ளன.
முருகன் என்றதும் நம் நினைவுக்கு வருவது,
மயில் வாகனத்தில் உலகையே சுற்றி வந்தும் நாரதர் கொண்டு வந்த ஞானப்பழம் கிடைக்காத விரக்தியில்
“மூத்தப்பிள்ளை செல்லப்பிள்ளை இளைய பிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை” என்று திருவிளையாடல் படத்தில் ஆக்ரோசமாக சிவனிடம் குமுறியதும்,
“சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?? என்று குழந்தைத்தனமான கேள்வியை கேட்டு கந்தன் கருணை படத்தில் ஒளவையாரின் அறிவுக்கண்ணை திறந்த சம்பவமும்தான் உடனே நம் ஞாபகத்துக்கு வரும்.
மேலும் கற்பனைக்கும் அறிவுக்கும் ஒப்பாத பற்பல புனைவுகளை மட்டுமே வைத்து நம் தமிழ்க் கடவுள் முருகனின் வரலாறு காலம் காலமாக திரிக்கப்பட்டு வந்துள்ளது.
தமிழர்களின் கடவுளாகவும் ,நம் இன முன்னோராகவும் பார்க்கப்படும் முருகனின் உண்மையான வரலாறு என்னவாக இருக்கும் என்பதை அறிய நம் பலருக்கும் ஆர்வம் உண்டு.
அந்த ஆவலை பூர்த்தி செய்ய திரு த.ரெ.தமிழ் மணி அவர்கள் “கொற்றவை சிறுவ”என்ற பெயரில் முருகனைப்பற்றிய உண்மையான பல தகவல்களை ஆராய்ந்து நமக்கு ஒரு புத்தகத்தை அளித்திருக்கிறார் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகல்களை பற்றி மன்னார்குடி மனிதநேய மருத்துவர் திரு. பாரதி செல்வன் அவர்கள் தொகுத்து நமக்கு அளித்துள்ளார்.அந்த தகவல்களை பற்றி பார்ப்போம்.
#தமிழ்_முருகன்
சிவனின் மகனல்ல..
கொற்றவை பெற்ற மகன்..
#விநாயகர்
அவனது தமையனல்ல
பிள்ளையார் என்பது
தமிழ் முருகனது மற்றொரு பெயரே…
#வள்ளி மட்டுமே
தமிழ் முருகனின்
காதல் மனைவி..
#தெய்வானைக்கும்
தமிழ் முருகனுக்கும்
எந்த தொடர்பும் இல்லை
என
நிறுவும் நூல்
#த_ரெ_தமிழ்மணி’யின்
#கொற்றவை_சிறுவ
என்னும்
#இந்நூல்!
தமிழர் இறைவழிபாட்டின் மீது ஆரியம் பூசிய
அழுக்கைக் கழுவி
அழுக்கை அழகெனப் போற்றும்
அடிமைத் தமிழர் அறியாமை அகற்றி,
தொன்மைத் தமிழர் வழிபாட்டின் மெய்நிலையை
தமிழர்க்கு உணர்த்தும்
#பாவலர் த ரெ தமிழ்மணியின் முயற்சி வெல்க!
தமிழர் வழிபாட்டிற்கு
ஆரியர் சூழ்ச்சியால்
நிகழ்ந்ததுபோல்தான்
#சமற்கிருதத்தால்
தமிழ் மொழிக்கு பாதி சிதைவு நிகழ்ந்தது..
மறு பாதி சிதைவையும்
நிகழ்த்த வரும்
இந்தி ஆதிக்கத்தை
தடுக்கும் போருக்கான
விழிப்புணர்வை
இந்நூல்
#தமிழ்_இறையன்பர்களுக்கு
ஊட்டட்டும்!
நன்றி:-திரு.மருத்துவர்.பாரதிசெல்வன்