Home>>அரசியல்>>12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு அரசு பொங்கல் சிறப்பு தொகையை வழங்க வேண்டும்.
அரசியல்கல்விசெய்திகள்தமிழ்நாடு

12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு அரசு பொங்கல் சிறப்பு தொகையை வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு அரசு பொங்கல் சிறப்பு தொகையை (Bonus) வழங்க வேண்டும்.

11 ஆண்டுகளுக்கு மேலாக பகுதி நேர ஆசிரியர்களாக மிகக்குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் அவர்களும் பண்டிகை நேரத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

போனஸ் மட்டுமின்றி தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்தது போல பகுதி நேர ஆசிரியர்களை திரு.ஸ்டாலின் அரசு பணிநியமனம் செய்ய வேண்டும்.

எத்தனையோ வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டதைப் போன்று இந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் ஆசிரியர் சமூகத்தை ஏமாற்ற நினைக்கக் கூடாது.


திரு. TTV. தினகரன்,
தலைவர்,
அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம்.

Leave a Reply