Home>>கல்வி>>கோபாலசமுத்திரம் பள்ளி மாணாக்கர்களுக்கு சிறப்பு உடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
கல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

கோபாலசமுத்திரம் பள்ளி மாணாக்கர்களுக்கு சிறப்பு உடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டது.

இன்று (22.02.23) மன்னார்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் பள்ளியில் 5 முதல் 8 வகுப்புகள் தமிழ் வழியில் பயிலும் மாணாக்கர்களுக்கு நன்கொடையாளர்களால் ரூபாய் 38000 மதிப்புள்ள சிறப்பு உடைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வில் இப்பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியர் திருமதி வீ.யோகாம்பாள் ஜெயராமன் அவர்களது மகனும், இப்பள்ளியின் முன்னாள் மாணவருமான திரு. R.J. ரத்னக்குமார் அவர்களால் 45 மாணாக்கர்களுக்கு  சிறப்பு உடைகள் வழங்கப்பட்டது.

மேலும் JCI . JFD. திரு. N.அருண்காந்தி அவர்களால் 30 மாணவர்களுக்கு சிறப்பு உடைகளும், நினைவில் வாழும் திரு. ராஜு வசந்தி அவர்களது குடும்பத்தினரால் 10 மாணாக்கர்களுக்கு சிறப்பு உடைகள் வழங்கப்பட்டது.

மன்னார்குடி வட்டாரக் கல்வி அலுவலர்கள் திருமதி. J. இன்ப வேணி, திரு. D. முத்தமிழன் அவர்களது முன்னிலையில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

நன்கொடையாளர்களுக்கு பள்ளிச் சமுதாயத்தின் சார்பில் பாராட்டுக்களும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது.


செய்தி உதவி:
திருமதி. தேவி அவர்கள்,
கோபாலசமுத்திரம் பள்ளி தலைமை ஆசிரியை,
மன்னார்குடி.

Leave a Reply