Home>>உலகம்>>தமிழ் மொழி விழா 2023 – பாலர் பள்ளி பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
உலகம்கலைகல்விசிங்கப்பூர்செய்திகள்தமிழர்கள்வரலாறு

தமிழ் மொழி விழா 2023 – பாலர் பள்ளி பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ் மொழி விழா 2023 – பாலர் பள்ளி பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.


நாள்: 29/04/2023
இடம்: புங்கோல் 21, சமூக மன்றம், சிங்கப்பூர்.

சிறப்பு விருந்தினர் உயர்திரு. விக்டர் பே (CEO – PAP Community Foundation) அவர்களை பாலர் பள்ளி பிள்ளைகள் பறை இசைத்து சிறப்பாக வரவேற்பு அளித்தார்கள். நிகழ்ச்சியின் துவக்கமாக தமிழ் மொழிக்கான சிறப்பு பாடல் அமைந்தது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அத்துடன் சிறப்பு விருந்தினர் உயர்திரு. விக்டர் பே அவர்களின் உரையில் தாய் மொழியின் அவசியத்தையும், தமிழ் மொழியை எப்பொழுதும் பேசவேண்டும் என்பதையும் அழகாக முன்வைத்தார். மேலும் தமிழ் மொழியை கற்பிக்கும் ஆசிரியர்கள், பெற்றோர்களை ஊக்கப்படுத்தி தமிழிலும் உரையாற்றினார்.

வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு பிள்ளைகள் தாங்கள் வரைந்த அழகிய ஓவியங்களை அவர்களுக்கு பரிசளித்து பெருமைப்படுத்தினார்கள். அடுத்ததாக மேடையில் கீழ்க்கண்ட கோணத்தில் பிள்ளைகள் பங்களித்தார்கள்…

பறையுடன், தமிழ் பாடலை பாடி ஒரு மேலும் சிறப்பித்தார்கள்.

“முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி” என்ற வரிகளுக்கு ஏற்ப பிள்ளைகள் அருமையாக பேசி நடித்து பலரையும் ஆச்சர்யப்படுத்தினார்கள்.

பிள்ளைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி பார்த்தவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது எனலாம்.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு பள்ளிகளில் இருந்து வருகை தந்த பிற பிள்ளைகள் கீழே குறிப்பிட்டுள்ள கோணத்தில் தமிழின் அழகை சிறப்பு விருந்தினர்கள், பெற்றோர்கள் மற்றும் பிற பிள்ளைகளுக்கு தங்கள் பிள்ளை தமிழில் அருமையாக விளக்கமளித்தார்கள்.

வரைக்கலையில் தமிழின் அழகு
கேள்வி பதிலில் தமிழின் அழகு
விளையாட்டில் தமிழின் அழகு
தொழில்நுட்பத்தில் தமிழின் அழகு
மாற்றுடையில் தமிழின் அழகு
கதைகளில் தமிழின் அழகு

கடந்த 2 ஆண்டுகளாக கோவிட் கட்டுப்பாடுகளால் இந்த நிகழ்வு நடைபெறாமல் இருந்தது. மீண்டும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் சிங்கப்பூரில் உள்ள PCF Sparkletot பள்ளி பிள்ளைகள் பலரும், தங்கள் பெற்றோருடன் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள்.

சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் “தமிழ் மொழி விழா” ஒரு மாதம் முழுவதும் நடைப்பெறும். அந்த அளவிற்கு சிங்கப்பூர் அரசு தாய் மொழியின் அவசியத்தை உணர்ந்து, அதை மக்களிடம் கொண்டு செல்லும் பொருட்டு அனைவரையும் இடைவிடாது ஊக்குவித்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் முதல்முறையாக கலந்துகொண்ட பல பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் புதுவித அனுபவத்தை வழங்கியது என்றே கூற வேண்டும். மேலும் இவ்வளவு பிள்ளைகளுக்கு இந்த நிகழ்ச்சிக்கு என பயிற்சிகள் கொடுத்து அவர்களை சிறப்பாக ஒருங்கிணைத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், ஆசிரியர்களும், தன்னார்வர்களும் பல தரப்பிலும் பாராட்டுகளை பெற்றார்கள்.


செய்தி சேகரிப்பு:
திரு. மாணிக்கம்,
சிங்கப்பூர்.

Leave a Reply