Home>>இந்தியா>>உள்நோக்கத்துடன் பெண் ஊழியர்களை திட்டமிட்டு பணியிட மாற்றம் செய்த ஆவின் நிர்வாகம்.
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேலைவாய்ப்பு

உள்நோக்கத்துடன் பெண் ஊழியர்களை திட்டமிட்டு பணியிட மாற்றம் செய்த ஆவின் நிர்வாகம்.

தமிழக அரசின் அரசாணையை காற்றில் பறக்க விட்ட ஆவின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல்.


அரசாணைகளை காற்றில் பறக்க விட்டு, அரசின் விதிமுறைகளை மீறுவதென்றால் ஆவின் அதிகாரிகளுக்கு அல்வா சாப்பிடுவது போல் என்பதை கடந்த சில வாரங்களுக்கு முன் 9மாவட்ட ஒன்றியங்களில் பணியாற்றும் தர உத்தரவாதம் பிரிவின் ஊழியர்கள், குறிப்பாக பெண் ஊழியர்களின் பணியிட மாற்றத்தின் மூலம் மீண்டும் நிருபித்திருக்கின்றனர்.

அரசு ஊழியர்கள் நிர்வாக ரீதியாக பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றால் அந்தந்த ஆண்டில் கல்வியாண்டு துவங்குவதற்கு முந்தைய ஏப்ரல் 1முதல் மே மாதம் 31வரை தான் பணியிட மாற்றம் செய்வதற்கான “Transfer Period” என்கிற அரசாணை நடைமுறையில் இருந்து வரும் சூழலில் ஆவினில் உள்ள தர உத்தரவாதம் பிரிவின் தலைமை அதிகாரி அந்த அரசாணையை மதிக்காமல், சேலம், திண்டுக்கல், கோவை, விருதுநகர், மதுரை, தேனி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருச்சி உள்ளிட்ட மாவட்ட ஒன்றியங்களில் பணியாற்றும் சுமார் 15 தரஉத்தரவாதம் பிரிவு ஊழியர்களை கடந்த 02.08.2023அன்று மாவட்டம் விட்டு வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்திருப்பதும், அதில் 13 பேர் பெண்கள் என்பதையும் வைத்து பார்க்கும் போது ஏதோ தீய எண்ணத்துடன் ஆவின் அதிகாரிகள் திட்டமிட்டு செயல்பட்டிருப்பதாக தெரிகிறது.

ஏனெனில் “Non Transferable Period” காலகட்டத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டால் அவர்களது குழந்தைகளின் கல்வி, பெற்றோர் நலன், குடும்ப சூழல் பாதிக்கப்படும் என்பதால் இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு தான் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் மே மாதம் 31 ஆம் தேதி வரை “Transfer Period” என அரசு கால நிர்ணயம் செய்து வைத்திருக்கும் சூழலில், ஆவின் ஊழியர்கள் விசயத்தில் அதனை கவனத்தில் கொள்ளாமலும், “Non Transferable Period” காலகட்டத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டுமானால் சம்பந்தப்பட்ட ஊழியர்களிடமிருந்து “Willingness” என்கிற விருப்ப மனு பெறாமலும் இணையத்தின் (சென்னையில்) தரஉத்தரவாதம் பிரிவு உதவி பொது மேலாளின் (AGM Q/C) ஆலோசனையின் பேரில், ஆவின் நிர்வாக இயக்குனர் திரு. வினித் ஐஏஎஸ் அவர்கள் பணியிட மாறுதல் உத்தரவிற்கு அனுமதி அளித்திருப்பது 100% அதிகார துஷ்பிரயோகமாகவே தெரிகிறது.

அதிலும் சுமார் 9க்கும் மேற்பட்ட மாவட்ட ஒன்றியங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சுமார் 15பேர் (அதில் பெண்கள் 13பேர்) வேறு, வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதும், அதில் இணையத்தில் (சென்னையில்) பணியாற்றும் ஊழியர்கள் ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பதும், குறிப்பாக சென்னையில் இருந்து ஒரு பெண் ஊழியரைக் கூட பணியிட மாற்றம் செய்யப்படவில்லை என்பதை காணும் போது மேற்கண்ட உத்தரவு திட்டமிட்ட சதியாகவும், உள்நோக்கம் கொண்டதாகவும் தெரிகிறது.

மேலும் மேற்கண்ட மாவட்ட ஒன்றியங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களாக பார்த்து, பார்த்து சென்னை இணையத்தில் உள்ள தர உத்தரவாதம் பிரிவின் உதவிப் பொதுமேலாளர் அவர்களால் பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்து அமுல்படுத்தப்பட்ட நிலையில் அந்த உதவி பொது மேலாளருக்கு பெண்கள் விசயத்தில் உள்ள சபல புத்தி தான் காரணம் என ஆவின் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதும் நமது சந்தேகத்தை உறுதி செய்வதாக இருப்பதோடு, பெண் ஊழியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கான “விசாகா கமிட்டி” இதுவரை ஆவினில் முறையாக செயல்படாமல் இருப்பது அதனை மேலும் உறுதி செய்வதாகவும் இருக்கிறது.
மேலாளர் நிலையில் உள்ள அலுவலர் பணியிடத்துக்கு துணை மேலாளர் நிலை ஊழியரை நியமித்தும், துணை மேலாளர் நிலை ஊழியரை பதவி உயர்வு இன்றி மேலாளராக பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது ஆவின் நிர்வாகத்தின் குளறுபடிகளை எடுத்துரைப்பதாக இருக்கிறது. அத்துடன் நிர்வாகப் பிரிவில் உள்ள இரண்டு அதிகாரிகள் குறித்து ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தற்போது உத்தரவுகள் போட்டுள்ள நிர்வாகப் பிரிவு அலுவலரின் செயல் திறனை புரிந்து கொள்ள முடிகிறது.

எனவே அரசு ஊழியர்கள் பணியிட மாற்றம் தொடர்பான அரசு விதிகளுக்கு மாறாக செயல்பட்டு மாவட்ட ஒன்றியங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களாக பார்த்து, பார்த்துப் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட காரணமாக இருந்த தர உத்தரவாதம் பிரிவின் (Quality Control) உதவிப் பொது மேலாளராக இணையத்தில் பணியாற்றி வரும் சம்பந்தப்பட்ட அந்த “கனமான” “ரேசன்” மீதும், விதிகளை புறந்தள்ளி, அரசாணைகளை காற்றில் பறக்க விட்டு, கோப்புகளை நகர்த்தியுள்ள உதவி பொது மேலாளர் (நிர்வாகம்) ஆகிய இருவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவும், தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள (பெண்) ஊழியர்களுக்கான பணியிட மாறுதல் உத்தரவை உடனடியாக ரத்து செய்து அவர்களை மீண்டும் பழைய அதே இடங்களிலேயே பணிபுரிய உத்தரவிட வேண்டும் எனவும், இனி வருங்காலங்களில் தமிழக அரசின் அரசாணையை முறையாக கடைபிடிக்க ஆவின் நிர்வாகத்திற்கு ஆணையிட வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

இணைப்பு:-
பணியிட மாற்றம் செய்யப்பட்ட பெண் ஊழியர்கள் பட்டியல்.


சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
அலைபேசி:- 9600131725
கட்செவி அஞ்சல் (WhatsApp) :- 9566121277
27.08.2023 / காலை 9.45மணி

Leave a Reply