பழனி அரசு மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவில் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைத்துக் கொடுக்க TARATDAC வேண்டுகோள்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கிறார்கள். தற்போது மழைக்காலம் என்பதால் அதிகமான பேர் மெட்ராஸ் ஐ நோய் உட்பட பலவிதமான கண் தொடர்பான நோய்களுக்கும் சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்கிறார்கள்.
இவர்களில் வயதானவர்களும் மாற்றுத்திறனாளிகளும் அடக்கம். இவ்வாறு வருகை தரும் நோயாளிகளின் வசதிக்காக கட்டிடத்தின் உள்ளே கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்கப்பட்டிருந்தாலும் கட்டிடத்தின் வெளியே படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
வெளியில் உள்ள படிக்கட்டுகளை கடக்காமல் உள்ளே யாரும் செல்ல முடியாது. எனவே, பழனி அரசு மருத்துவமனையின் முதல்வர் இவ்விசயத்தில் உடனடியாக தலையிட்டு கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளத்தை கண் சிகிச்சை பிரிவில் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
—
A. காளீஸ்வரி – நகர தலைவர்
P. தங்கவேல் – நகர செயலாளர்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்,
பழனி நகர்க்குழு.
தொடர்பு இலக்கங்கள்: 9360012625, 9360980745