Home>>தமிழ்நாடு>>கால்பந்தாட்ட களத்தில் கலக்கும் கிராமத்து சிறார்கள்
தமிழ்நாடுவிளையாட்டு

கால்பந்தாட்ட களத்தில் கலக்கும் கிராமத்து சிறார்கள்

மதுரையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற மரோடனா நினைவு கால்பந்து போட்டியில் பங்கேற்று 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்று கோப்பையுடன் திரும்பியிருக்கும் கீழத்திருப்பாலக்குடி இளம் சிறார்கள் இதோ…

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள கீழத்திருப்பாலக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் தான் இந்த வெற்றி கோப்பையின் விதைகள்.

குறைந்த மாணாக்கர் எண்ணிக்கையில் இயங்கிய இப்பள்ளி மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு பின்னர் ஒட்டுமொத்த கிராம மக்களின் முயற்சியில் ஸ்மார்ட் கிளாஸ், ஆங்கில வழிக் கல்வி என்று தனது பயணத்தை ஆரம்பித்தது புதுப்பொலிவுடன்.

ஊர் மக்கள் பள்ளியை மீட்டதுடன் விட்டு விடாமல் தன் வீட்டுப் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து முன் உதாரணமாக திகழ்ந்தனர். குறிப்பாக அரசு பள்ளி ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் தங்கள் பிள்ளைகளை இந்த பள்ளியில் சேர்த்தனர்…

பாரதி காண விரும்பிய புதுமைப் பெண்களும் இந்த முயற்சியில் வெற்றி கொண்டனர்.. ஆம் இப்பள்ளியில் பயிலும் குழந்தைகளின் தாய்மார்கள் தான் அவர்கள்.. தன் பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதோடு நிறுத்தி விடாமல் அவர்களின் ஒவ்வொரு முயற்சிக்கும் தூண்டுகோலாக துணை இருந்து எல்லா கலைகளிலும் தேர்ச்சி பெற வழிகாட்டி வருகின்றார்கள்.

இந்த கிராமத்தின் மற்றுமொரு அங்கமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்ஙட்டது தான் இந்த மார்க்சு கால்பந்தாட்ட பயிற்சி கழகம்.

ஆரம்பித்து ஓராண்டு நிறைவுக்குள் அனைத்து தடைகளையும் தாண்டி, இவர்கள் பெற்றிருக்கும் இந்த வெற்றி பாராட்டத்தக்கது.

கீழத்திருப்பாலக்குடியின் குட்டி மரோடனாக்கள் இவர்கள் தான்
1) கீழத்தெரு
முருகன்-ராஜலெட்சுமி மகன்
*சாய் பிரியன்*

2) கீழத்தெரு
செந்தில் குமார்-கீதா மகன்
*பால பிரியன்*

3) தெற்குத்தெரு
கரிகாலன்-மலர்கொடி மகன்
*அமுதபாரதி*

4) கீழத்தெரு சௌந்தர்ராஜன்-தனபாக்கியம்
மகள்வழி பேரன்
இளவரசன் – பொற்செல்வி (மேலத்திருப்பாலக்குடி) மகன்
*திருச்சரன்*

5) தெற்குத் தெரு குணசேகரன்-செங்கொடி மகள்வழி பேரன்
அறிவு-ஜெயபாரதி மகன்
அபிஷேக்

இவர்களின் வெற்றியின் இலக்கு விண்ணைத் தாண்டி செல்லட்டும்.

மதுரையில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் முக்கியமான ஒன்று (Knockout Match) தோல்வியுற்றால் வெளியேறும் போட்டி.

வெற்றி விபரங்கள்:


முதல் சுற்று
Virudhunagar fc vs Marx fc
0-6

இரண்டாம் சுற்று
Madurai fc vs Marx fc
0-5

அரை இறுதிச்சுற்று
Karur fc vs Marx fc
0-7

இறுதிச்சுற்று

K.K Nagar fc vs Marx fc
0-2


வெற்றியாளர்கள் கீழத்திருப்பாலக்குடி மார்க்சு கால்பந்தாட்ட குழு சிறார்கள்!

பயிற்சியாளர் திரு.சி.மார்க்ஸ் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்!

சாதனை குழந்தைகளின் சரித்திரம் எட்டுத் திட்டும் பரவட்டும்!
எல்லோரும் வாழ்த்துங்கள்!

வரலாறு படைக்கட்டும் இந்த வாண்டுகள்!…


செய்தி:
பொன்மணி தர்மராஜன், BE.,

Leave a Reply