Home>>அரசியல்>>எல்லா பணிகளையும் நிறைவு செய்துவிட்டு தானே கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை திறந்து இருக்க வேண்டும்.
அரசியல்செய்திகள்தமிழ்நாடுபோக்குவரத்து

எல்லா பணிகளையும் நிறைவு செய்துவிட்டு தானே கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை திறந்து இருக்க வேண்டும்.

எல்லா பணிகளையும் நிறைவு செய்துவிட்டு தானே கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை திறந்து இருக்க வேண்டும். அமைச்சர் சொன்ன நேரத்துக்கு எல்லாம் சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசலில் குறித்த நேரத்தில் பேருந்து ஓட்ட முடியுமா??


புதிய பேருந்து நிலையம் நான்கு சக்கரம் மற்றும் இரு சக்கர வாகனங்கள் வைத்திருக்கிறவர்களுக்கு மட்டும் தான் பயனே தவிர அன்றாட காய்ச்சிகளுக்கு கொடும் சிரமத்தை கொடுத்திருக்கு திராவிட மாடல் அரசு. புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள கிளாம்பாக்கத்திற்கு ரயில் நிலையம், மெட்ரோ நிலையம், புதிய பேருந்து நிலையம் வரை சென்னை மாநகர பேருந்து நிலையம் செல்ல வசதி இவை எல்லாம் செய்துவிட்டு அல்லவா புதிய பேருந்து நிலையத்தை திறந்து இருக்க வேண்டும்??

சாதாரணமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் செல்ல 2 மணி நேரம் ஆகும். அப்படி என்றால் ஆவடி, எண்ணூர் இந்த பகுதியில் இருந்து வரக்கூடிய மக்களின் நிலை என்னவாகும்?? வயதானவர்கள், குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் இவர்கள் எல்லாம் எப்படி வந்து சேருவார்கள்?? கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் செல்ல குறைந்தது ரூ.30 செலவு ஆகும். இரவு 10 மணிக்கு திருச்சியில் பேருந்து ஏறினால் காலை 5 மணிக்கு கோயம்பேடு வந்து சேரும். அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு எளிதில் செல்ல முடியும்.

திருச்சியில் இருந்து கிளாம்பாக்கம் சீக்கிரம் வந்தால் பெண்களின் சமூக பாதுகாப்பு?? இரவு நேரங்களில் எப்படி அவர்கள் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு செல்ல முடியும்?? எல்லா வசதிகளையும் ஏற்படுத்தாமல் அவசர கதியில் புதிய பேருந்து நிலையத்தை திறக்க வேண்டிய அவசியம் என்ன?? ஒரு டீ , ஸ்நாக் , காலை உணவு இவை எல்லாம் அதிக விலைக்கு புதிய பேருந்து நிலையத்தில் விற்றால் ஏழைகள் எப்படி தங்கள் பசியை போக்கிக் கொள்ளுவார்கள்??
பேருந்து நிலையத்தை தனியார் பராமரிப்பில் விட்டால் விலையும் அதிகரிக்கத்தானே செய்வார்கள். ஒரு எளிய நபர் டீயோ, காபியோ வாங்கி குடிக்க முடியுமா?? சென்னையில் மட்டும் வளர்ச்சியை குவிக்காமல் எல்லா மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். முதலில் பிராட்வேயில் பேருந்து நிலையம் இருந்தது.

மக்கள் தொகையை கணக்கில் கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு மாறினது. தற்போது சென்னையின் போக்குவரத்து நெரிசலை கவனத்தில் கொண்டு புதிய பேருந்து நிலையத்தை கிளாம்பாக்கத்திற்கு மாற்றி இருக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் திண்டிவனம் பகுதிக்கு பேருந்து நிலையத்தை மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

மக்களின் சிரமத்தை கவனத்தில் கொண்டு, எல்லா வசதிகளையும் ஏற்படுத்திவிட்டு தான் எந்த பேருந்து நிலையத்தையும் திறக்க வேண்டுமே தவிர அவசர கதியில் எதையும் செய்தால் மக்கள் தான் சிரமபடுவார்கள். மாவட்டம் தோறும் வேலை வாய்ப்பை அதிகரிக்க கம்பெனிகளை உருவாக்குங்கள். சென்னைக்கு வேலை தேடி வரும் வாய்ப்பை குறையுங்கள். மாதவரம் பகுதியில் சில பேருந்துகளை அங்கிருந்து இயக்குவது போல அருகாமையில் பேருந்து நிலையங்களை உருவாக்கி ஏழை மக்களின் தேவைகளை நிறைவு செய்யுங்கள்.

ஏழை மக்கள் தான் அதிகம் பேருந்துகளை பயன்படுத்தி வருகிறார்கள். அரசு அவர்களின் தேவைகளை அறிந்து செயல்பட்டால் மட்டுமே மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அரசு செய்யுமா??


திரு. யா. அருள்,
எழுத்தாளர்,
சென்னை.

Leave a Reply