நீண்ட நெடிய விவசாய வரலாறு கொண்ட தமிழ்ச் சமூகத்தில், அந்த விவசாயத்திற்கு உதவிய இயற்கை (சூரியன்) மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் விழா மற்றும் மாட்டு பொங்கல், ஏறு தழுவுதல் போன்ற விழாக்களை தமிழர்கள் வரலாறு நெடுகிலும் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த விவசாயிகளை சிறப்பு செய்யும் விதமாக, மன்னன் பாண்டிய நெடுஞ்செழியன் இவர்களை தனது அமைச்சரவையில் பங்கெடுத்துக் கொள்ள செய்தார்.
இது குறித்து 2000 ஆண்டுகளுக்கு முன்பே புலவர் மாங்குடிமருதனார் தனது பாடலில், மன்னர் பாண்டியன் நெடுஞ்செழியன் சிறப்பை தனது மதுரை காஞ்சி யில் பதிவு செய்துள்ளார்.
“காவிதி”, என்று விவசாயிகளுக்கு பாண்டிய நெடுஞ்செழியன் பட்டம் கொடுத்து அவர்களை முன்னிலை படுத்தினார்.(தொல்.அகத்.30),
ஆகவே மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கிற்கு “பாண்டியன் நெடுஞ்செழியன் அரங்கு”, என்று பெயர் சூட்டுமாறு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறோம்.
—
திரு. விசுவநாதன் கரிகாலன்.