அரசியல்வாதிகள், காவல்துறையினர், மற்றும் அரசு அதிகாரிகள் என்றால் நேர்மையற்றவர்கள் ஊழல்வாதிகள் லஞ்சம் வாங்குபவர்கள் என்று பொத்தாம் பொதுவாக பொதுபுத்தி திணிக்கபட்டு வரும் இன்றைய சூழலில் எளிமையானவர்களை, நேர்மையாளர்களை அடையாளபடுத்தபட்டு அவர்களை முன்மாதிரியாக கொண்டாடபட வேண்டும்.
சாத்தான் குளத்தில் காவல்துறையினாரால் கொடூரமுறையில் தாக்குதலுக்கு உள்ளாக்கபட்ட போது காவல்துறையினர் மீது எழுந்த கோபம் நியாமானது. அதே நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் சமூக விரோதிகளால் கொல்லபடும் போதும், அரசியல் படுகொலைகள் நடக்கும்போதும் கள்ள மௌனம் கலைத்து இது போல இனி நடைபெறாத வகையில் வலிமையாக குரல் கொடுக்க வேண்டும், பாதிக்க பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும், அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் இரங்கல் அறிக்கையாவது கொடுத்து அந்த குடும்பத்திற்கும் காவல்துறைக்கும் ஆதரவாக நிற்க வேண்டும்.
அரசியல் படுகொலைகள், காவல்துறை அதிகாரி சமூக விரோதிகளால் கொலை, மணல் கொள்ளையர்களால் தாசில்தார் படுகொலை, வீஏஓ மீது தாக்குதல் போன்ற செய்திகளை வெறுமனே கடந்து போனால் நேர்மையான உண்மையான அதிகாரிகள் கூட நமக்கு ஏன் வம்பு என ஒதுங்கி கொள்ளும் நிலை உருவாகிவிடும்.
ஆகவே மக்களாட்சி சக்திகளுக்கு ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய மிக பெரிய பொறுப்பு உள்ளது. அரசாங்கம் நிவாரணம் கொடுப்பதையும் தாண்டி இது போல இனி நடக்காது என்ற நம்பிக்கையை அளிக்க வேண்டியது அரசின் கடமை.
—
செய்தி உதவி:
தோழர் கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.