Home>>ஆன்மீகம்>>வடலூர் பெருவெளியில் பன்னாட்டு மையத்தை அமைக்க கூடாது.
வடலூர் பெருவெளியில் பன்னாட்டு மையத்தை அமைக்க கூடாது. வேறு இடத்தில் அமைக்க வேண்டும்
ஆன்மீகம்செய்திகள்தமிழர்கள்தமிழ்நாடுவரலாறு

வடலூர் பெருவெளியில் பன்னாட்டு மையத்தை அமைக்க கூடாது.

வடலூர் பெருவெளியில் பன்னாட்டு மையத்தை அமைக்க கூடாது. வேறு இடத்தில் அமைக்க வேண்டும் – சென்னை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சன்மார்க்க அன்பர்கள் வலியுறுத்தல்.


தமிழ்நாடு அரசு வடலூர் பெருவெளியில் பன்னாட்டு மையத்தை அமைக்க கூடாது. வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று 09-02-2024 காலை 11 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் மன்றத்தில் நடைப்பெற்றது.
இதில் தமிழ்நாடு முதல்வர் உடனடியாக தலையீட்டு வடலூர் பெருவெளியில் பன்னாட்டு மையத்தை அமைக்காமல் வேறு இடத்தில் அமைக்கப்படும் என்று சட்டமன்ற கூட்டத்திலே அறிவிக்க வேண்டும் என சன்மார்க்க அன்பர்கள் வலியுறுத்தினர்.

மேலும் பெருவெளி காக்க வரும் பிப்ரவரி 20 -ஆம் நாள் கடலூரில் மஞ்சகுப்பத்தில் தெய்வத் தமிழ்ப் பேரவை நடத்தும் அறவழி போராட்டத்தில் சன்மார்க்க அன்பர்களும் பொது மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பும் விடுக்கப்பட்டது.

இதில் திருபோரூர் வேலைக்கார ஐயா, உத்திர ஞான சிதம்பரம் சேவை இயக்க பொறுப்பாளர்கள் மு ச இளங்கோ, ராசேந்திர பிரசாத், திரு அருட்பா ஆ.பாலகிருஷ்ண பிள்ளை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கா.தமிழ்வேங்கை, வள்ளலார் பணியகத்தில் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வே.சுப்ரமணியசிவா, முருகன்குடி பொறுப்பாளர் க.முருகன், அருட்பெருஞ்சோதி அறக்கட்டளை நிர்வாகி ராபர்ட் ஜெரால்டு, திரு முருகதாஸ் உள்ளிட்டோர் கருத்துகளை பகிர்ந்தனர்.

இதில் பல சன்மார்க்க அன்பர்களும் பங்கேற்றனர். இந்நிகழ்வை ஊடகவியலாளர் திரு விஸ்வநாத் ஒருங்கிணைத்தார்.


செய்தி உதவி:
சுப்பிரமணிய சிவா வேலுசாமி.

Leave a Reply