Home>>அரசியல்>>காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் உருவ பொம்மை எரிப்பு போராட்டம்
அரசியல்இந்தியாகர்நாடகாசெய்திகள்தஞ்சாவூர்தமிழ்நாடுமாநிலங்கள்மாவட்டங்கள்வரலாறுவேளாண்மை

காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் உருவ பொம்மை எரிப்பு போராட்டம்

காவிரி உரிமை மீட்பு குழு தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்களின் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் இன்று (16/02/2024) தஞ்சாவூர் பனகல் கட்டிடம் எதிரே நடைபெற்றது. இதில் பல்வேறு தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களும் உழவர் தோழமை அமைப்புகளும் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது என்ற நோக்கில் கன்னட வெறி அரசாங்கம் காவிரி நீர் பாசன பகுதியில் எல்லையான மேகை தட்டுவில் 62 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணை கட்டுவதற்கு பெரும் முயற்சி எடுத்து வருகிறது இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் இந்திய ஒன்றிய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது அதன்படி நீராற்றல் துறை செயலாளராக இருந்த திரு. ஹல்தர் அவர்களை காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஒன்றிய அரசு நியமித்தது இந்த காவிரி மேலாண்மை ஆணையத்தில் மத்திய அரசாங்கத்தின் உறுப்பினர்கள் ஐந்து நபர்களும் கர்நாடக கேரள தமிழ்நாடு பாண்டிச்சேரி உறுப்பினர்கள் ஒருவரும் என மொத்தம் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட அந்த ஆணையம் உள்ளது இதில் எந்த தீர்மானமாகினாலும் வாக்கெடுப்பு முறையில் செயல்படுத்தப்படுகிறது அவ்வகையில் ஒன்றிய அரசு என்ன நினைக்கிறதோ அதையே செயல்படுத்தக்கூடிய நிலை தான் நிலவுகிறது காவிரி உரிமை மீட்பு குழு தொடர்ந்து இந்த இந்த ஆணையத்தை கலைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறது.

தமிழர்கள் அச்சப்படுவதைப் போலவே தனக்கு எவ்வித அதிகாரமும் இல்லாத மேகத்தாட்டு அணைக்கட்டு இவ்வாறு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்ந்து தலையிடுகிறது இதற்கு முந்தைய அதிமுக ஆட்சியில் இருந்த பொழுதும் காவிரி ஆணைய கூட்டம் நடைபெறும் ஒவ்வொரு கட்டத்திலும் மேகதாண்டு அணை திட்ட மதிப்பீடு விவாதத்திற்கு வருவதும் நீங்கள் இதை விவாதத்திற்கு வைத்தால் தமிழ்நாடு அரசு பங்கேற்காது என்று புறக்கணிப்பதும் அவர்கள் அதை விவாதத்தில் இருந்து எடுப்பதும் இதுவரை நடைமுறையில் இருந்தது இம்முறை தமிழ்நாடு அரசு சார்பிலும் புதுச்சேரி அரசு சார்பிலும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மேலே சாப்பிட்டு அணை கட்டுவதற்கு எதிர்த்து வாக்களித்து இருக்கிறார்கள் இவர்கள் எதிர்த்து வாக்களித்தாலும் ஒன்றிய அரசின் உறுப்பினர்கள் ஐந்து பேர் கர்நாடக கேரள உறுப்பினர்கள் இரண்டு பேர் என ஏழு பேரில் பெரும்பான்மையாக கட்டுவதற்கான திட்ட மதிப்பிட அறிக்கை அறிக்கை தீர்மானம் வெற்றி பெற்று நீராற்றல் துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது இது தமிழ்நாடு அரசு மறைமுகமாக மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு ஒத்துழைப்பு கொடுக்கிறதோ என்ற அச்சத்தை நமக்கு தெரிவிக்கிறது.

மேலும் காவிரி நதிநீர் பங்கீடு மட்டுமே வேலையாக கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து மேகதாது அணை கட்டுதல் தொடர்பான தீர்மானத்தை கூட்டத்துடன் பட்டியலில் வைக்க வேண்டியதன் உள்நோக்கம் என்ன இதற்கு ஆணையத் தலைவர் ஹல்தர் இந்த அளவு ஆர்வம் காட்ட வேண்டியதன் அவசியம் என்ன போன்ற அச்சங்கள் தமிழக தமிழர்களுக்கு ஏற்படுவதை தொடர்ந்து ஹல்தரின் உருவ பொம்மையை எரித்து எங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம்.

இந்த உருவ பொம்மை போராட்டம் தொடக்கம் மட்டுமே மத்திய நீராட்டல் துறை அமைச்சகம் காவிரி மேலாண்மை ஆணைய பரிந்துரையை நிராகரிப்பது என்றும் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அறிவிக்கும் வரை காவிரி உரிமை மீட்பு குழு தனது போராட்டத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும்.


செய்தி உதவி:
திரு. இராசசேகரன்,
மன்னார்குடி.

Leave a Reply