Home>>அரசியல்>>18 தாய்த்தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கும் ஓரிரு கோடி ரூபாயை ஒதுக்கி இருக்க வேண்டும்.
தமிழ்நாடு சட்டமன்றம்
அரசியல்கல்விசெய்திகள்தமிழ்நாடு

18 தாய்த்தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கும் ஓரிரு கோடி ரூபாயை ஒதுக்கி இருக்க வேண்டும்.

தமிழ்நாடு (பட்ஜெட்டில்) வரவு செலவு அறிக்கையில் கல்விக்காக ரூபாய் 44000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

18 தாய்த்தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கும் ஓரிரு கோடி ரூபாயை ஒதுக்கி இருக்க வேண்டும். அவைகளை தனியார் பள்ளிகளாகப் பார்க்காமல் தமிழ்நாட்டு அருமருந்தாம் தமிழ் பயிர்விளையும் பள்ளிகளாக அரசு கருதி இருக்க வேண்டும்.

சிறுபான்மையினர் கல்விக்கூடம் என்ற பேரில் சென்னையில் 28 அரசு உதவிபெறும் மார்வாடிகள் நடத்தும் பள்ளிகளுக்கு அரசு உதவி அளிக்கப்படுகிறது.

சௌகார்பேட்டையில் இருக்கும் இப்பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாகவே நடத்துவதில்லை. ஆனால் அரசின் நிதி உதவி கிடைக்கிறது.

தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கு இதுவரை எந்த உதவியும் இல்லை. தாய்த்தமிழ்ப் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் பகல் உணவுத் திட்டம் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். இதற்கென பெரிய செலவினம் ஆகப்போவதில்லை. தாய்த்தமிழ்ப் பள்ளிகள் தமிழ்வளர்க்கும் நாற்றங்கால்கள்.

தமிழ்நாட்டிலேயே தமிழ் நாற்றங்கால்களை கருக அனுமதிப்பதும் மாற்றாந்தாய் குழந்தைகளாக நடத்துவதும் துயரமானது.

தாய்த்தமிழ்ப் பள்ளிகளை அரசு உதவிபெறும் பள்ளிகளின் வரம்புக்குள் கொண்டுவந்து வரைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

உலகத் தாய்மொழி நாளான இன்று பிப்ரவரி 21ல் தமிழ்நாடு அரசு எமது கோரிக்கைக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்ஜெட் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது இதனை ஏற்று அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்!


யா. அரங்க குணசேகரன்,
தலைவர் தமிழக மக்கள் புரட்சிக் கழகம் மற்றும் தாய்த்தமிழ் மன்றம்,
தமிழர் தேசிய சிந்தனைக் களம்,
சமூக சமத்துவக் கூட்டமைப்பு, தமிழ் உரிமைக் கூட்டமைப்பு
90475 21117

Leave a Reply