வியப்பும் அதிர்ச்சியும் அளிக்கக்கூடிய ஆணைகளை கல்வித்துறையில் புகுத்துகிறார்கள்.!
இந்திக்குப் பதிலாக தெலுங்கு கன்னடம் மலையாளத்தை மூன்றாவது மொழியாக விருப்பப்பாடமாக படிப்போருக்கு தனித்துறை, ஆசிரியர் நியமனம், ஊக்கத்தொகை என விரியும் புதியவகையிலான மும்மொழித்திட்டம் தமிழ்நாட்டில் தமிழை பின்னுக்குத் தள்ளும்!
தமிழ் ஆங்கிலம் எனும் இருமொழிக் கொள்கை என்ற 70ஆண்டுகால கல்விக் கொள்கையால் தமிழ் இன்னும் இரண்டாம் தர மொழியாகவே நடத்தப்படுகிறது!
இந்தியை எதிர்ப்பதில் உறுதி காட்டும் திமுக அரசு – ஏதேனும் ஒரு வட்டார மொழியாக மூன்றாம் மொழியை தேர்வுசெய்துகொள்ள வலியுறுத்தும் பாஜக மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையின் நீட்சியே தெலுங்கு மலையாளம் கன்னடத்துக்கு தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மூன்றாம் மொழிக்கான தகுதி உயர்த்தும் நடவடிக்கை!
மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை! இருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை! ஒருமொழிக் கொள்கையே உண்மைக் கொள்கை!
என்ற முழக்கத்தை மண்மூடிப் போகச்செய்யும் தமிழாநாட்டு அரசின் மறைமுக மும்மொழிக் கொள்கையை தமிழ்த்தேசிய இயக்கங்களும் பரந்துபட்ட தமிழ் உணர்வாளர்களும் கண்டித்து குரல் எழுப்ப வேண்டும்!
திராவிட மாடல் என்று சொல்வதன் மெய்யான பொருள் என்பது தமிழ்நாட்டில் ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தை மெல்லத்திணித்து தமிழ்நாட்டை கலப்பின தேசமாக்கும் திட்டமிட்ட சதியாகவே பார்க்கிறோம்!
—
ஐயா. அரங்க குணசேகரன்,
தலைவர் தமிழக மக்கள் புரட்சிக் கழகம்,
90475 21117