Home>>வரலாறு>>நடுகல்

நீண்ட நெடிய நமது தமிழர் வரலாற்றின் வியக்கவைக்கும் பல விசயங்களை ஆதாரத்துடன் மற்றும் விளக்கங்களுடன்

 

காதலும், வீரமும் பிரிக்க முடியாவண்ணம் ஒருங்கே அமையப்பெற்றது நம் தமிழரின் வாழ்வியல்!

 

முடியுடைய வேந்தர் மூவரும், வேளிரும் தமக்குள் மேலாண்மை, அதிகாரம் நிலைகொள்ள போரிட்டுக் கொண்டனர்

 

குடிமக்களும் தம்முள், அக்காலத்திய பெருஞ்செல்வமான மாடுகளை கவரும் பொருட்டு மாண்டுள்ளனர். இவற்றை சங்க இலக்கியங்கள்தொரு பூசல்“, “ஆநிரை கவர்தல்என கூறுகின்றன. இவர்கள் மட்டுமில்லாது குறிஞ்சி நில மாந்தர்கள் வேட்டையாடும்போதோ அல்லது ஊரை அச்சுறுத்திய பன்றி, புலி, போன்ற விலங்கினத்திலிருந்து மக்களை காப்பாற்ற சமர் புரிந்துள்ளனர். இவ்வாறு நிகழ்ந்த சமரில் இறந்து போன வீரர்கள் நினைவாய் மக்கள் போற்றி வந்துள்ளனர். போரில் மரணம் ஏற்படும் நிகழ்வு போர்க்களத்தில் வழக்கமான ஒன்று. அப்போர்தனில் பெருவீரம் காட்டியோர், மக்களை காப்பாற்ற விலங்கினங்களோடு போராடி தன்னுயிரை இழந்தோருக்கு, இறந்த இடத்தில் கல்லெழுப்பி வணங்கும் வழக்கம் இருந்துள்ளது. இதனை நடுகற்கள் அல்லது வீரக்கற்கள் என அழைக்கப்படுகிது. ஆங்கிலத்தில் இவ்வகை கற்களை Herostones என்பர்.

 

ஆரம்ப கட்டத்தில் இறந்தவர் நினைவாய் ஒரு பெரும் கல்லெழுப்பி வணங்கியதும், பின்னர் கி.மு 4 ம் நூற்றாண்டு அளவில் அக்கற்களில் இறந்தவரின் பெயரையும், ஊரினையும் இறந்த காரணத்தினையும் கல்லில் பொறித்துள்ளனர். புலிமான் கோம்பை, தாதபுரம், பொற்பனைக்கோட்டை நடுகற்கள் இந்நிகழ்வை  எடுத்துக்காட்டுகிது. அதற்கடுத்ததாய் இறந்தவரின் உருவத்தினை ஒரு கோட்டுருவமாய் வரைந்துள்ளனர். இவ்வகை உருவங்கள் கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளில் கிடைக்கிறதுஇன்னும் சில காலம் கழித்து இறந்தவரின் உருவத்தினையும், அவர் காட்டிய வீரத்தினையும் சிற்பமாய் வடிக்கும் வழக்கம் வருகிறது! பல்லவர் காலம் தொட்டு நாயக்கர் காலம் வரை இவ்வகை நடுகல் நிறைய கிடைக்கிறதுஇக்கற்களின் மன்னரின் பெயர், அரசு, ஆட்சியாண்டு, இறந்தவரின் விவரம், உருவம், இறப்பிற்கு காரணம் ஆகியவை முழுதாய் கல்வெட்டாய் பொறித்துள்ளனர்.

இவ்வாறு இறப்பவர்களின் குடும்பத்தாருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. நிறைய நிலங்கள் தானமளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்படும் நிலம்உதிரப்பட்டி நிலம்என அழைக்கப்படும்.

பொற்பனைக்கோட்டை

 

திருச்சி பார்த்தி

(2050 பங்குனி மாத மின்னிதழிலிருந்து)

Leave a Reply