Home>>இந்தியா>>இந்திய சிலம்பக் கோர்வை சங்க நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் மத்திய, மாநில அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்திய சிலம்பக் கோர்வை சங்க நிர்வாகிகள் மற்றும் சிலம்ப வீரர்கள் மத்திய மற்றும் மாநில அரசுக்கு நன்றி
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவரலாறுவிளையாட்டு

இந்திய சிலம்பக் கோர்வை சங்க நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் மத்திய, மாநில அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்திய சிலம்பக் கோர்வை சங்க நிர்வாகிகள் மற்றும் சிலம்ப வீரர்கள் மத்திய மற்றும் மாநில அரசுக்கு தங்களின் நன்றியை தெரிவித்தனர்.

சிலம்ப விளையாட்டை மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் “விளையாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி ஊக்குவித்தல்” (Promotion of inclusiveness through Sports) என்ற கூறில் சிலம்ப விளையாட்டினை மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விளையாட்டுத் துறை அங்கீகரித்து சேர்த்துள்ளது.

தமிழகத்தின் பாரம்பரிய பெருமைமிக்க சிலம்ப விளையாட்டை பாதுகாக்கவும் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்தை உலகறியச் செய்யும் நோக்கத்திலும் மத்திய அரசின் “கேலோ இந்தியா” திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பட்டியலில் சேர்த்திட முயற்ச்சிகளை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கும் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அவர்களுக்கும் மத்திய அரசுக்கும் எங்களது இந்திய, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இயங்கி வரும் சிலம்பக் கோர்வை கழகத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இன்று தமிழ்நாடு சிலம்பம் கோர்வை சங்கம் சார்பாக தமிழக நிர்வாகிகள் கூட்டம் திருச்சி, தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது அதில் தமிழக அரசு வேலை வாய்ப்பில் மூன்று சதவிகிதம் ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் சிலம்ப விளையாட்டினை சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சேர்க இந்திய விளையாட்டு ஆணையத்திடம் (Sports Authority of India) கோரிக்கை வைத்து கொரோனோ பாதுகாப்புடன் கூடிய மாநில அளவிலான சிலம்ப போட்டி வரும் டிசம்பர் மாதம் நடத்துவது பற்றியும் அனைவரின் ஒருமித்த கருத்துடன் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டிசம்பர் மாத போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியரை அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தங்களது மாவட்டத்தில் சிலம்ப போட்டி நடத்தி அதில் வெற்றி பெரும் போட்டியாளர்களை திருச்சியில் நடக்க இருக்கும் மாநில போட்டியில் கலந்து கொள்வார்கள் எனவும் முடிவெடுக்கபட்டது.

முன்னதாக தமிழக சிலம்பம் கோர்வை சங்கத்தின் தலைவராக ஜீ.வி.என். மருத்துவமனை பி.லி சேர்மன் டாக்டர். வி.ஜெயபால் அவர்களும், செயலாளராக கி.ஆ.பெ.விசுவநாதம் பள்ளி உடற்கல்வி இயக்குனர் ம.சுந்தரேசன் அவர்களும் பொருளாளராக உலக சிலம்ப இளைஞர் சம்மேளனம் செயலாளர் ஆர்.கணேஷ் அவர்களும் துணை தலைவராக நேஷனல் கல்லூரி தமிழ் பேராசிரியர் முனைவர் என்.மாணிக்கம், கிருஷ்ணாலயம் டிரஸ்ட் நிறுவனர் என்.கே.ரவிசந்திரன், உலக சிலம்பம் இளைஞர் சம்மேளனம் துணை தலைவர் மற்றும் இந்திய சிலம்ப கோர்வை தலைவர் இரா.மோகன் இணை செயலாளராக சிங்கப்பூர் உலக இளைஞர் சிலம்பம் தலைவர் தமிழ் மகன் (எ) கண்ணன் அவர்களும், தமிழ்நாடு காவல்துறை திருச்சி என்.ரவி அவர்களும் நிர்வாக குழு உறுப்பினர்களாக ச.மணிகண்டன், மோ.பிரகதா, மயிலாடுதுறை எம்.தினேஷ்குமார், தேனி மாவட்டம் எம்.சசிக்குமார், திண்டுக்கல் மாவட்டம் எம்.செந்தில்குமார் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் ஏராளமான பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புக்கு:
திரு. R.மோகன்,
இந்திய சிலம்பக் கோர்வை தலைவர்,
கைபேசி: +91 9994037722 & +91 9443137722

கூட்டம் நடைபெற்ற இடம்:
கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளி, தில்லைநகர், திருச்சி – 18
தேதி: 19.09.2021 ஞாயிற்று கிழமை
நேரம்: காலை 11.30 மணி.

Leave a Reply