Home>>கவிதை>>போதை  போதை
கவிதை

போதை  போதை

பெறுபவளுக்கு  வலியின் போதை, 

 

பெற்றவனுக்கு  மகிழும் போதை, 

 

பிறந்தவனுக்குத்  தவழும் போதை, 

 

வளர்பவனுக்கு  வறுமையில் போதை, 

 

கற்பவனுக்குக்  காதல் போதை, 

 

வென்றவனுக்குக்  களவும்  போதை, 

 

தோற்றவனுக்கு மதுவில் போதை, 

 

முகர்ந்தவனுக்கோ  மேனியில் போதை, 

 

சிரிப்பவனுக்குச் சிக்கல் போதை, 

 

சிந்தையுடையவனுக்கு  உறக்கம் போதை, 

 

அதிகாரம் கொண்டவனுக்கு   அடிமை  போதை, 

 

அடிமைப்பட்டவனுக்கு  ஆள  போதை, 

 

அனைத்தும் அறிந்தவனுக்கு மூடர் போதை, 

 

மூடர் கூட்டத்துக்கு முன்னேறும் போதை, 

 

மூச்சை விட்டவனுக்கோ  முச்சந்தியும்  போதை!!! 

 

பெ.மேகநாதன்,  சென்னை.

(2050 பங்குனி மாத மின்னிதழிலிருந்து)

Leave a Reply