Home>>அரசியல்>>அழிவின் விளிம்பில் தமிழ்க் கல்வெட்டுப் படிகள்!
அரசியல்இந்தியாகர்நாடகாசெய்திகள்தமிழ்நாடுமாநிலங்கள்வரலாறு

அழிவின் விளிம்பில் தமிழ்க் கல்வெட்டுப் படிகள்!

தமிழகத்தில் இருந்த கல்வெட்டுகளை ‘திராவிடக் கல்வெட்டுகள்’ என்று பெயரிட்டு ஊட்டியில் இருந்து மைசூருக்கு மாற்றினார்கள். பின்னர் ஒரு நூற்றாண்டாக ஒரு தமிழ்க் கல்வெட்டுப் படியும் படிக்கப்படவில்லை என்பதை அறிந்து, வழக்கிட்டு, அவற்றை சென்னைக்கு மாற்ற வேண்டும் ‘தமிழ்க் கல்வெட்டுகள்’ என்ற பிரிவில் வைக்க வேண்டும் என்ற தீர்ப்பை 2021ஆம் ஆண்டில் தமிழக ஆய்வாளர்கள் பெற்றார்கள்.

இப்படிப் போராடிப் பெற்ற வெற்றியால் 2022ஆம் ஆண்டில் சென்னைக்கு அனுப்பப்பட்டவை எதிர்பார்க்கப்பட்ட சுமார் 1 லட்சம் படிகளில் 30 ஆயிரத்திற்கும் குறைவானவைதான். ஆனால் அப்படி வந்த படிகளை ஒரு குளிரூட்டப்பட்ட கட்டடம் இல்லாமல், ஊட்டிக்கும் அனுப்பாமல், போதிய ஊழியர்களை நியமிக்காமல் அழியவிட்டு வேடிக்கை பார்க்கிறது தமிழக அரசு. அதற்குக் காரணம் கேட்டால் வழக்கம் போல மத்திய அரசு நிதி தரவில்லை என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

இந்நிலையில் தமிழக அரசு அந்த கல்வெட்டுப் படிகளை அழிய விடுவதைச் சுட்டிக்காட்டி மைசூர் கல்வெட்டுத்துறை இயக்குநர் ‘முனிரத்தினம் ரெட்டி’ இந்திய தொல்லியல்துறைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழகத்தில் உரிய பாதுகாப்பு இல்லாமல் உள்ள கல்வெட்டுப் படிகளை மீண்டும் மைசூருக்கே அனுப்பக் கோரியுள்ளார்.

கருணாநிதி பெயரில் கட்டடங்களாகக் கட்டித்தள்ளும் திராவிட அரசுக்கு கல்வெட்டுப்படிகளை வைக்க ஒரு கட்டடம் தேவை என்ற அறிவு இல்லையா? ஊட்டியில் முன்னர் ஏன் அவற்றை வைத்தார்கள் என்று சிந்திக்க மூளை இல்லையா? ஒரு நூற்றாண்டு வரை பழமையான படிகளை விரைவாக ஆவணப்படுத்த வேண்டும் என்ற அடிப்படைகூட தெரியவில்லையா?

அல்லது அத்தனை வரலாற்று ஆதாரங்களையும் அழித்துவிட்டு மூவேந்தர் என்போர் கருணாநிதி, உதயநிதி, இன்பநிதி என்று வரலாறு எழுதப் பார்க்கிறார்களா?

தமிழ்தான் திராவிடம் என்ற திருடர் கூட்டம் தமிழை அழித்துக் கொண்டே தமிழருடன் உறவாடப் பார்க்கிறது.


திரு. மன்னர் மன்னன்,
தமிழ் வரலாற்று ஆய்வாளர்.

Leave a Reply